கோயம்புத்தூர் (Coimbatore) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 2 மில்லியன் மக்கள் வசிக்கும் ஒரு தொழில்துறை நகரமாகும். பெரும்பாலும் தென்னிந்தியாவின் மான்செசுட்டர் அல்லது டெட்ராய்டு நகரங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இந்நகரம் மோட்டார்-பம்ப் செட்கள் மற்றும் பல்வேறு பொறியியல் பொருட்களின் உற்பத்திக்கு பிரபலமான நகரமாகும். கோவை மாநகரம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.