Jump to content

Wy/ta/உதகமண்டலம்

From Wikimedia Incubator
< Wy | ta
(Redirected from Wy/ta/ஊட்டி)
Wy > ta > உதகமண்டலம்
Wy/ta/உதகமண்டலம்

உதகமண்டலம் என்பது உதகை, ஊட்டி என, பல பெயரால் அறியப்படுகிறது. இது தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கோடை வாழிடமாகும். உதகை கடல் மட்டத்தில் இருந்து 2,240 மீட்டர் (7,347 அடி) உயரத்தில் உள்ளது. உதகமண்டலம் என்ற பெயரானது "மலைகளில் உள்ள வீடு" என்று பொருள்படும் "ஓத்தகல்-மண்டு" என்ற தோடர் மொழிச் சொல்லில் இருந்து வந்தது. இது தோடர், குரும்பர், பணியர், இருளர், கோத்தர் என ஐந்து பழங்குடி இன மக்களின் தாயகமாகும். 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இது ஒரு மலை வாசத்தலமாக மாற்றப்பட்டது. மேலும் மதராசு மாகாணத்தின் கோடைகால தலைநகராகவும் செயல்பட்டது. ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ளது, இது இந்தியாவில் நெகிழிப் பைகளை முதன்முதலில் ஒழித்த இடங்களில் ஒன்றாகும், எனவே நீங்கள் அங்கு செல்கிறீர்கள் என்றால், நெகிழி அல்லாத, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை எடுத்துச் செல்ல நினைவில் கொள்ளுங்கள்.

அறிமுகம்

[edit | edit source]
உதகமண்டலம் கிராமப்புறக் காட்சி
மலையில் உள்ள அஞ்சலக அலுவலகம்

நீலகிரியில் (நீல மலைகள்), இது ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. ஆண்டு முழுவதும் சராசரியாக 15-20°C வெப்ப நிலை நிலவுவதால் இதன் வானிலை மிகவும் இனிமையானதாக இருக்கும். குளிர்காலத்தில் இதன் வெப்பம் 0° செ. வரைக் குறையும். அடர்த்த தாவரங்களால் சூழப்பட்ட உருண்ட நீண்ட மலைகள், தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட சிறிய குன்றுகள், பீடபூமிகள், நீலகிரி மரங்கள் ஆகியவற்றால் இந்த நிலப்பரப்பு குறிக்கப்படுகிறது. மலைகளின் பல பகுதிகள் இயற்கையான காப்புக் காடுகளாகப் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் குடியிருப்பு அல்லாத இடங்களில் முகாமிடுவதற்கு சிறப்பு அனுமதி தேவைப்படும். ஊட்டி ஈர்ப்பின் ஒரு மையப் புள்ளியாக உள்ளது. சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு தானியில் சுற்றுப்பயணம் செய்வது மிக அவசியம். துரதிர்ஷ்டவசமாக, இந்த மலை நகரம் நெரிசல் மற்றும் இயற்கை வளங்களின் சுரண்டலால் பாதிக்கப்படுகிறது. மிகை சுற்றுலாவானது இயற்கை வளங்களின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக மாசுபாடு, நீர் பற்றாக்குறை போன்றவை ஏற்படுகின்றன.

குன்னூர், கோத்தகிரி போன்ற சிறிய நகரங்களும் மலைப்பாங்கான பகுதியில் உள்ளன. இந்த சிறிய நகரங்கள் பார்வையிடவும் நேரத்தை செலவிடவும் சிறந்த தேர்வாகும். இவை ஊட்டியிலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயணத் தொலைவில் உள்ளன. அங்கும் இதே மாதிராயான இயற்கை காலநிலை நிலவுகிறது. மேலும் ஓப்பீட்டலவில் மிகவும் மலிவு.

செல்ல

[edit | edit source]

வானூர்தியில்

[edit | edit source]

உதகையில் வானூர்தி நிலையம் இல்லை. அருகிலுள்ள வானூர்தி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் கீழே:

  • கோயம்புத்தூர் (CJB). அருகிலுள்ள வானூர்தி நிலையம் (88 கி.மீ. 3.5 மணி நேரப் பயண நேரம்)
  • மைசூர் (MYQ). மைசூர் வானூர்தி நிலையமும் அருகில் உள்ளது (116 கிமீ மற்றும் 4 மணி நேரப் பயண நேரம்)

தொடருந்தில்

[edit | edit source]

உதகமண்டலம் தொடருந்து நிலையம். நீலகிரி மலை ரயில் (NMR) உதகமண்டலத்தை மேட்டுப்பாளையத்துடன் இணைக்கிறது. இது ஒரு குறுகிய இரயில் பாதை ஆகும், இது பொம்மை ரயில் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. 2005 ஆம் ஆண்டில் இது இந்திய மலை ரயில்வேயின் கீழ் யுனெசுகோ பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இது பற்சக்கர தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது தொடருந்தின் வேகத்தைக் குறைக்கிறது. இன்று, நீராவி மற்றும் டீசல் என்ஜின்கள் என இரண்டும் இந்த பாதையில் இயங்குகின்றன. இந்த பாதை 51 கி.மீ நீளம் கொண்டது. மேலும் நீண்ட நேர பயண நேரம் ஆகும். குறைந்த நேரமே பயணிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் குன்னூரிலிருந்து பயணிக்கலாம்.

பேருந்தில்

[edit | edit source]

உதகமண்டலம் பேருந்து நிலையம். உதகமண்டலம் பேருந்து மூலம் நாட்டின் பிறபகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் (மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம்) (4 மணி பயண நேரம்), கோழிக்கோடு, மைசூர் ஆகிய ஊர்களில் இருந்து நேரடி பேருந்துகள் உள்ளன.

மகிழுந்தில்

[edit | edit source]

நீலகிரி தமிழ்நாட்டில் உள்ளது, என்றாலும் இது கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் எல்லைகளுக்கு அருகில் உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டிற்குள் இருந்து, அதிக காடுகள் நிறைந்த வளைந்து செல்லும் சாலையில் பயணித்து, பல கொண்டை ஊசி வளைவுகளில் ஏறி மேலே சென்றடையலாம். எந்த மாநிலத்திலிருந்து மேற்கொள்ளும் சாலைப் பயணமும் இயற்கை அழகுடன் இருக்கும். இருப்பினும் கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம்-குன்னூர்-உதகமண்டலம் சாலை (அதாவது தமிழ்நாட்டு பாதை) கூடுதலாக பயணிக்கப்படும் மற்றும் சிறப்பாக பராமரிக்கப்படும் சாலையாகும். நீலகிரி மலைகளுக்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் பெயரளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் "புதிய பேருந்து நிலையத்தில்" உள்ள வாடகை மகிழுந்துகளில் (டாக்சி) முன்பதிவு செய்யும் போது ₹2500 (பேரத்துக்குட்பட்டது) வாங்குகின்றனர். பிறருடன் பயணத்தைப் பகிர்ந்துகொள்ளும் போது தலா ₹600 வசூலிக்கின்றனர். நான்கு பேர் ஒரு ஆம்னியைப் (மாருதி வேன்) பகிர்ந்து கொள்கின்றனர். தங்கும் விடுதியில் முன்பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பெரும்பாலும் கோயம்புத்தூருக்கு ₹2000 இக்கு வாடகை மகிழுந்தை வழங்குகிறார்கள்.

பெங்களூரிலிருந்து உதகை சாலை வழியாக 284 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலையின் நிலையைப் பொறுத்து பயணம் சுமார் எட்டு மணி நேரம் ஆகும். முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் ஒரு குறுகிய பாதை உள்ளது. இது மசினகுடி மற்றும் கல்ஹட்டி ஊர்களைக் கடந்து செல்கிறது. இந்த பாதையில் உதகமண்டலத்துக்கான தொலைவானது சுமார் 50 கி.மீ வரை குறைகிறது. இந்த சாலை காடு வழியாக செல்லுவதால் இரவில் மூடப்படுகிறது. இரவில் மூடப்படும் சோதனைச் சாவடியில் சில மணிநேரம் செலவிட வேண்டியிருக்கும். இந்த சாலை குறுகியதாகவும் செங்குத்தானதாகவும் உள்ளது. மசினகுடி நகரில் உணவகங்களும் ஒரு எரிபொருள் நிலையமும் உள்ளது. மசினகுடிக்கு அருகிலுள்ள ரிசார்ட்டுகளில் குடிசைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. இவை பொறுமையான வார இறுதி பயணங்களுக்கு ஏற்றவை. பெங்களூருக்கும் மைசூருக்கும் இடையில் உணவகங்கள் உள்ளன. மைசூருக்குள்ளும் உணவகங்கள் உள்ளன. ஆனால் மைசூரிலிருந்து ஊட்டிக்கு செல்லும் பாதையில் சில உணவகங்களே உள்ளன. பந்திப்பூர் மற்றும் முதுமலை காடுகள் வழியாக மிகவும் நிதானமான பயணத்திற்கு சீக்கிரமாகப் பயணத்தைத் தொடங்கவேண்டும். வழியில் காட்டு விலங்குகளைக் காணும் வாய்ப்பு உண்டு.

சுற்ற

[edit | edit source]

வாடகை மகிழுந்துகள், தானிகள் போன்றவை ஏராளமாகக் கிடைக்கின்றன. சுற்றுலா மகிழுந்துகளைத் தவிர வேறு எந்த வாகனங்களுக்கும் நிலையான கட்டணங்களும் இல்லை. தானிகள் குறைந்தபட்சம் ₹30 வசூலிக்கின்றன. அனைத்து முக்கிய இடங்களுக்கும் நகரப் பேருந்துகள் உள்ளன. தனியாரும், தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகமும் (TTDC) சுற்றுலாக்களை ஏற்பாடு செய்கின்றன. சுமார் 3-4 வெவ்வேறு நாள் பயண வழிகள்/சுற்றுலாத் தொகுப்புகள் உள்ளன. பேருந்தில் சுற்றுலாப் பயணக் கட்டணம் ₹125-150 மற்றும் மகிழுந்தில் சுற்றுலா பயணக் கட்டணம் ₹900-1100. நீங்கள் தங்கும் விடுதி வழியாக மகிழுந்தை ஏற்பாடு செய்திருந்தாலும் (TTDC கூட), மறைமுக செலவுகள் எதுவும் இல்லையா என்பதை பயணத்திற்கு முன் விடுதி மற்றும் பயண ஏற்பாட்டாளரிடம் சரிபார்க்கவும். மகிழுந்து ஓட்டுநர்கள் பெரும்பாலும் அதிக வாகன நிறுத்துமிடக் கட்டணம் மற்றும் மதிய உணவைக் கோருவார்கள், இது சுற்றுலாத் தொகுப்பில் உள்ளடக்கியதாக இருக்கும். பேருந்து/மகிழுந்து ஓட்டுநர்கள் தொலைதூர உணவகங்கள் மற்றும் கடைகளிலிடமிருந்து ஆதாயம் பெறுவது அசாதாரணமானது அல்ல. இந்த இடங்கள் அதிக கட்டணம் கொண்டவை, அத்தகைய உணவகங்களைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

பேருந்து மற்றும் மகிழுந்து ஒட்டுநர்கள் சுற்றுலாப் பயணிகளை மதிய உணவிற்கு தொலைதூர, விலை மிக்க உணவகங்களுக்கு அழைத்துச் செல்லுவர். உணவு குளிர்சியாக இருக்கும், இடமும் சுத்தமாக இருக்காது, மேலும் அங்கு விலையும் கூடுதலாக இருக்கும் (மகிழுந்து ஓட்டுநரின் மதிய உணவிற்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும்) எனவே அத்தகய இடங்களில் சாப்பிடவேண்டாம்.

மேலும், உறங்குவதற்கான ஏற்பாடுகளுக்கு ஓட்டுநர் பரிந்துரைப்பதைத் தவிர்க்கவும். அவர்கள் (அவர்களில் சிலர்) உங்களை தங்குமிடத்திற்காக விடுதிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கு அவர்கள் 20% தரகுப் பணத்தைப் பெறுவார்கள். இது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் அறை கட்டணத்தில் சேர்க்கப்படும்.

பார்க்க

[edit | edit source]
பெர்ன்ஹில்ஸ் அரண்மனை
அரசு தாவரவியல் பூங்கா
புனித ஸ்டீபன் தேவாலயம், உதகமண்டலம்
സേക്രഡ് ഹാർട്ട് കത്തീഡ്രൽ, ഊട്ടി
ബോട്ട് ഹൗസ്, ഊട്ടി തടാകം
സ്റ്റോൺ ഹൗസ്, ഊട്ടി
  • அண்ணாமலை கோயில் (உதகமண்டலத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில்). இந்த இடம் முருகப் பெருமானின் புகழ்பெற்ற கோயிலாக வளர்ந்துள்ளது. மேலும் இது இறைவனின் ஏழாம் படைவீடு என்றும் அழைக்கப்படுகிறது. கோயிலிலிருந்து பார்க்கும் காட்சி அருமையாக உள்ளது. மலையின் உச்சியில் ஒரு கண்காணிப்பு மையம் உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அற்புதமான பரந்த அளவிலான காட்சியைப் பார்த்து அனுபவிக்கலாம்.
  • தொட்டபெட்டா சிகரம். (நேரம்: காலை 8 மணி - மாலை 5 மணி). தொட்டபெட்டா (பெரிய மலை என்று பொருள்) 2,623 மீ உயரத்தில் உள்ளது. இது நீலகிரியின் மிக உயரமான சிகரமும், தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரமும் ஆகும். இந்தச் சிகரம் உதகமண்டலத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த சிகரத்திலிருந்து சுற்றியுள்ள பகுதியின் பரந்த காட்சியைக் காண இயலும். தெளிவான வானிலை உள்ள நாளில் கோயம்புத்தூரின் சமவெளிகள் மற்றும் மைசூரின் தட்டையான மலைப்பகுதிகள் வரை காட்சிகளைக் காண இயலும். இந்தச் சிகரத்தில் தொலைநோக்கி இல்லம் எனப்படும் கோபுரம் போன்ற அமைப்பு உள்ளது. இந்த உயரமான வட்ட அமைப்பு சுற்றுப்புறங்களை சிறந்தமுறையில் காண வசதியாக உள்ளது. இந்த இடத்தில் பல உணவகங்களும், தற்காலிக கடைகளும் உள்ளன. இந்த பகுதி ஒரு வனவிலங்கு மண்டலம் ஆகும். எனவே மலையேற்றம் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே சிகரத்தை மகிழுந்து, தானி போன்றவை மூலம் மட்டுமே அடைய முடியும். நுழைவுச்சீட்டு: ₹6 (5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசம்). ஒளிப்படக் கருவி: ₹10; காணொளி ஒளிப்படமி: ₹50.
  • எதிரொலிப் பாறை (Echo Rock). சிலர் இதை "ஆட்டுக்குட்டிப் பாறை" என்று அழைக்கிறனர். ஏனெனில் இது இயற்கையாகவே ஒரு ஆட்டுக்குட்டியின் வடிவத்தை ஒத்து உள்ளது. ஒரு சிறிய காட்டின் வழியாகச் சென்றால், நீங்கள் பாறையைப் பார்க்கலாம்.
  • ஃபெர்ன் ஹில்ஸ் அரண்மனை. மைசூர் மகாராஜாவின் அரண்மனையாக இருந்து தற்போது விடுதியாக மாறிய இந்த விடுதிக்குச் செல்ல மறக்காதீர். மிகவும் அழகான இடம், மலிவு விலையில் தேநீர் சிற்றுண்டிகள், சற்று விலையுயர்ந்த பஃபே இரவு உணவு இங்கு கிடைக்கின்றன. அழகான அரண்மனையும் அதன் தோட்டமும் விருந்தினர்களுக்குத் திறந்திருக்கும். ஃபெர்ன் ஹில் விடுதியை உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் மைசூர் அரண்மனை என்று அழைப்பர்.
  • உதகமண்டலம் தாவரவியல் பூங்கா. (நேரம்: காலை 7:00 மணி - மாலை 6:30 மணி எல்லா நாட்களும்). நீங்கள் உதகமண்டலத்துக்கு சுற்றுலா சென்றால், 1847 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அரசு தாவரவியல் பூங்காவைப் பார்வையிடலாம். அரசு தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படும் அழகிய தோட்டங்கள் சுமார் 22 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளன. தோட்டங்களில் 650 க்கும் மேற்பட்ட பல வகையான செடிகள், மரங்கள் உள்ளன. இதில் 20 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான மரத்தின் புதைபடிவமும் அடங்கும். இந்த தோட்டம் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பசுமையின் மத்தியில் நடந்து செல்லவும், அரிய ஃபெர்ன்கள் மற்றும் புதர்களை அருகில் பார்க்கவும் விரும்புபவர்களிடையே மிகவும் பிரபலமானது. நீங்கள் மே மாதத்தில் உதகையில் இருந்தால், ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் கோடை விழாவில் கலந்துகொள்ளலாம். இந்த விழாவில் உள்ளூர்வாசிகள் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும், மலர் கண்காட்சி, பல்வேறு பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நுழைவுச் சீட்டுகள்: பெரியவர்கள்: ₹100, குழந்தைகள் (5 - 10 வயது): ₹50, ஸ்டில் கேமரா: ₹50, வீடியோ கேமரா: ₹100.
  • தோடர் கோயில் (தாவரவியல் பூங்கா வழியாக அணுகலாம்). உதகை பிராந்தியத்தின் பூர்வீக குடிகள் தோடர்களாவர். அவர்கள் நீலகிரி பிராந்தியத்தின் பழங்குடியினரில் ஒரு இனத்தவர். தோடர் கோயில் மூங்கிலால் கட்டபட்டு தலைகீழ் U- வடிவில் உள்ளது. கோயில் தரை மட்டத்திற்கு கீழே அமைந்துள்ள ஒரு வட்ட வடிவ உறையின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு சிறிய, தாழ்வான நுழைவாயில் வழியாக கோயிலின் உட்புறம் செல்லவேண்டும். கோயிலின் உட்புறத்தை அணுக நுழைவாயில் வழியாக குனிந்து செல்ல வேண்டும். இருப்பினும், கோயிலுக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நுழைவாயிலில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், எருமைகளைக் குறிக்கும் பல உருவங்கள் குறிப்பிடபட்டுள்ளன. எருமைகள் தோடர் பண்பாட்டின் முதன்மையான பகுதியாகும். கோயில் வளாகத்திற்கு அருகில் ஒரு எருமை மந்தை சுற்றித் திரிவதைக் காணலாம். தோடர் உடையில் பிரகாசமான சிவப்பு, கருப்பு கோடுகள் கொண்ட சால்வை உள்ளது. தோடர் கோயில் வளாகத்தில் பல விழாக்கள் நடத்தப்படுகின்றன. பண்டிகை விவரங்களை உள்ளூர் மக்களிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
  • உதகை ரோஜா பூங்கா. (நேரம்: காலை 7:00 மணி - மாலை 6:30 மணி எல்லா நாட்களும்). இது ஒரு அற்புதமான, மிகப் பெரிய தோட்டமாகும். இங்கு 400 வகைகளைக் கொண்ட 27,000 ரோஜா செடிகள் உள்ளன. இது இந்தியாவின் மிகப்பெரிய ரோஜா செடிகளின் தொகுப்பாகும். தோட்டத்தின் வழியாக வளைந்து செல்லும் நடைபாதைகள் உள்ளன. அலங்கார நீரூற்றுகளும் தோட்டத்தில் உள்ளன. தோட்டம் உதகை நகரத்தின் அற்புதமான காட்சியாக உள்ளது. இங்கு உள்ள ஒரு கடையில் ரோஜா விதைகள் விற்கப்படுகின்றன. ஏப்ரல் பிற்பகுதியிலிருந்து சூன் மாத தொடக்கத்தில் ரோஜாக்கள் பூக்கும், எனவே பருவம் இல்லாத நேரத்தில் அங்கு செல்வது அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்காது. நுழைவுச்சீட்டுகள்: பெரியவர்கள்: ₹75, குழந்தைகள்: ₹40, ஸ்டில் கேமரா: ₹50 மற்றும் வீடியோ கேமரா: ₹100.
  • தேவதாரு காடு (Pine forest). தேவதாரு காடு என்பது ஒரு இயற்கை அழகு கொண்டதாகும். காட்டை அடுத்து ஒரு ஏரி இருக்கிறது. பாதை சரிவாக இருப்பதால் நடக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். சரிவில் காமராசர்-சாகர் அணையின் நீர் உள்ளது.
  • படப்பிடிப்பு தளம் (Shooting Point). இது ஒரு அருமையான இடம். பார்க்கத் தவறவிடாதீர்கள். இதன் காட்சி மிகவும் அருமையாக இருக்கும்.
  • தேயிலை தொழிற்சாலை. இங்கு பல மரத் தோட்டங்களும் தொழிற்சாலைகளும் உள்ளன. வழியில் நிறைய காணலாம். அவர்கள் இலவச தேநீருடன் உங்களை அணுகி சில தேநீர் பொட்டலங்களை வாங்கச் சொல்லுவார்கள். ஆனால் தேநீர் பற்றி உங்களுக்கு அதிகம் தெரியாது என்றால் கவனமாக இருந்து, அவர்களிடமிருந்து வாங்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் பொட்டலத்தில் உள்ள தேநீர் தூள் அவர்கள் உங்களுக்கு சுவைக்கக் கொடுத்த அதே சுவையைத் தருவதாக இருக்காது. மசாலாப் பொருட்களின் தரம் அவ்வளவு நன்றாக இல்லை.
  • மெழுகு அருங்காட்சியகம். இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படாத ஒரு தனியார் முதலீடாகும். பிற வெளிநாட்டு மெழுகு அருங்காட்சியகங்களைப் போல அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் அதன் நல்ல காட்சியைக் காணலாம். அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள மிகப் பழைய வீடு மிகவும் கவர்ச்சிகரமானது. மெழுகுவர்த்திகள் கிடைக்கின்றன. அருங்காட்சியகத்தை விரிவுபடுத்தும் திட்டம் நிதி பற்றாக்குறையால் தடைபட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள், இதுவே ஒரே ஆதரவாக உள்ளது.
  • ஆதாம் நீரூற்று (Adam's Fountain). உதகை ஆளுநரின் நினைவாக 1886 ஆம் ஆண்டு அமைக்கபட்டது. கட்டுமானச் செலவு பொது நிதி மூலம் திரட்டப்பட்டது. இந்த அலங்கரிக்கப்பட்ட நீரூற்று மலை வாசத்தலத்தின் ஒரு முக்கிய அடையாளமாகும்.
  • அரசு அருங்காட்சியகம் (கல் வீடு அல்லது கன்னிமாரா காட்டேஜ் அல்லது கல் பங்களா) (உதகை-மைசூர் சாலை). (நேரம்: காலை 10:30 - மாலை 6:30. வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை, தேசிய விடுமுறை நாட்களில் மூடப்படும்). இந்த அருங்காட்சியகம் அப்போதைய கோயம்புத்தூரின் ஆட்சியர் ஜான் சல்லிவனின் பங்களாவில் அமைந்துள்ளது. 1823 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது உதகையின் முதல் கல் வீடு ஆகும். நீலகிரி மாவட்டத்தின் பண்பாட்டு பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இந்த அருங்காட்சியகம் 1989 இல் உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் நீலகிரியின் தாவரங்கள், விலங்கினங்கள், பழங்குடியினர் பொருட்களைக் கொண்ட பல காட்சியகங்கள் உள்ளன. தொல்லியல், நாணயவியல் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய காட்சியகங்கள் உள்ளன. நுழைவுச் சீட்டு: பெரியவர்கள்: ₹10, குழந்தைகள்: ₹5, வெளிநாட்டவர்: ₹100, வெளிநாட்டு குழந்தைகள்: ₹75, ஸ்டில் கேமரா: ₹100 மற்றும் வீடியோ கேமரா: ₹200.
  • குன்னூர் சிம்ஸ் பூங்கா
  • டால்ஃபின் மூக்கு நுனி
  • பைகாரா அருவி
உதகையில் உள்ள தேவாலயங்கள்
  • புனித ஸ்டீபன் தேவாலயம். (St. Stephen's Church) ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த தேவாலயம் உதகையில் உள்ள மிகப் பழமையான தேவாலயமும், நீலகிரி மாவட்டத்தின் மிகப் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும்.