Wy/ta/வங்காள விரிகுடா
Appearance
வங்காள விரிகுடா (Bay of Bengal) என்பது இந்தியப் பெருங்கடலில் அடங்கிய ஒரு கடலாகும். முக்கோண வடிவில் உள்ள இக்கடலின் கிழக்கில் மலேய தீபகற்பமும், வடக்கில் மேற்கு வங்காளம், மற்றும் வங்கதேசமும், மேற்கில் இந்திய துணைக்கண்டமும் அமைந்துள்ளன. இலங்கை, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகியவை இக்கடலில் உள்ள தீவுகளாகும்.
கங்கை, பிரம்மபுத்ரா, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, மெக்னா, ஐராவதி ஆகியவை வங்காள விரிகுடாவில் கலக்கும் முக்கிய நதிகளாகும். சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா, பாண்டிச்சேரி ஆகியவை இக்கடலின் கரையில் அமைந்துள்ள சில முக்கிய நகரங்களாகும்.