Wy/ta/ஆந்திரப் பிரதேசம்

ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) என்பது இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றாகும்.இதன் கிழக்கே வங்காள விரிகுடாவும், வடக்கே தெலுங்கானாவும், வடகிழக்கே சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவும், தெற்கே தமிழ்நாடும், மேற்கே கர்நாடகாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. பரப்பளவு அடிப்படையில் இது இந்தியாவின் எட்டாவது பெரிய மாநிலமாகும்.
பிராந்தியங்கள்
[edit | edit source]மாவட்டங்கள்
[edit | edit source]நகரங்கள்
[edit | edit source]பிற பயண இலக்குகள்
[edit | edit source]புரிதல்
[edit | edit source]ஆந்திரப் பிரதேசம் அதன் செழுமையான வரலாறு, கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்றது.கடற்கரைகள், மலைகள், வனவிலங்குகள், காடுகள் மற்றும் கோவில்கள் எனப் பல்வேறு சுற்றுலாத் தலங்களை ஆந்திரப் பிரதேசம் கொண்டுள்ளது. தென்னிந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்தின் கலாச்சாரமும் அடிப்படையில் திராவிடத் தன்மையுடையதாகும். இது வட இந்தியாவின் ஆரியக் கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.
வரலாறு
[edit | edit source]
ஆந்திரப் பிரதேசத்தின் வரலாறு, அடுத்தடுத்து ஆட்சி செய்த வம்சங்களாலும் பல்வேறு பண்பாட்டுத் தாக்கங்களாலும் தனித்துவம் பெற்று விளங்குகிறது. அமராவதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சாதவாகன வம்சம் (கி.மு. 1-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரை), இன்றைய ஆந்திரப் பிரதேசத்தை ஆண்ட மிகப் பழமையான வம்சங்களில் ஒன்றாகும். இப்பகுதியின் தனித்துவத்தை வடிவமைப்பதில் இவ்வம்சம் ஒரு முக்கியப் பங்காற்றியது. அதன் பின்னர், இப் பிரதேசம் இக்சுவாகுகள், சாலங்காயனர்கள், விசுணுகுண்டினர்கள், கீழைச் சாளுக்கியர்கள், சோழர்கள் மற்றும் காகதீயர்கள் ஆகியோரால் ஆளப்பட்டது. இறுதியாக, தில்லி சுல்தானகத்தின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. பின்னர், தில்லி சுல்தானகத்தின் வலிமை குன்றியபோது, பாமினி வம்சத்தினர் இப்பகுதியின் ஆட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். ஒடிசாவைச் சேர்ந்த கசபதி வம்சத்தினரும் இப்பகுதியை ஆட்சி செய்தனர்; பின்னர், கிருசுணணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் இப்பகுதி விசயநகரப் பேரரசின் ஓர் அங்கமாக இணைந்தது.
விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, கோல்கொண்டாவைச் சேர்ந்த குதுப் சாகி வம்சம் ஆந்திரப் பகுதியின் பெரும்பான்மை மீது ஆதிக்கம் செலுத்தியது. எனினும், குதுப் சாகி ஆட்சியாளரான அபுல் அசன் தானா சாவை ஔரங்கசீப் சிறைப்பிடித்ததைத் தொடர்ந்து, இப்பகுதி முகலாயப் பேரரசின் தக்காண மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஆயினும், 1707-ஆம் ஆண்டில் ஔரங்கசீப் காலமான பிறகு, தக்காண மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் தன்னை ஐதராபாத்தின் ஒரு பகுதி-சுயாதீன நிசாம் ஆக நிலைநிறுத்திக்கொண்டார்.
1765 முதல் 1778 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நிசாமிடமிருந்து ஐந்து சர்க்கார்களின் கட்டுப்பாட்டை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்; இவை அனைத்தும் கூட்டாக 'வட சர்க்கார்கள்' (தற்போதைய கடலோர ஆந்திரா) என அழைக்கப்பட்டன. பின்னர், 1800-ஆம் ஆண்டில் நிசாம் ராயலசீமா பகுதியை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். இவ்விரு பகுதிகளும் சென்னை மாகாணத்தின் ஓர் அங்கமாயின. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பின்னரும் 1953 ஆம் ஆண்டு வரை இந்நிலை தொடர்ந்தது. 1953-ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் தெலுங்கு பேசும் மாவட்டங்களிலிருந்து 'ஆந்திர மாநிலம்' உருவாக்கப்பட்டது; கர்நூல் அதன் தலைநகராக அமைந்தது. 1956-ஆம் ஆண்டில், முன்னாள் ஐதராபாத்து மாநிலத்தின் தெலங்கானா பகுதி ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு 'ஆந்திரப் பிரதேசம்' உருவாக்கப்பட்டது; ஐதராபாத்து அதன் தலைநகராகத் திகழ்ந்தது.
2014-ஆம் ஆண்டு சூன் மாதம் 2-ஆம் தேதி, பிரிவினைக்கான மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடர்ந்து, தெலங்கானா ஆந்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இதனால் ஆந்திரப் பிரதேசம் தனக்கென ஒரு தலைநகரம் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டது. 2017-18 ஆம் ஆண்டு வரையிலான காலம் வரை ஐதராபாத்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராகத் தொடர்ந்தது. அக்காலகட்டத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரம், பழைய சாதவாகனத் தலைநகருக்கு அருகிலுள்ள அமராவதிக்கு மாற்றப்பட்டது.
பெயர்
[edit | edit source]"ஆந்திரா" (Āndhra) என்பது, ஆரியக் குடியிருப்புகளின் விளிம்புகளில் வாழ்ந்த ஆரியரல்லாத மக்களைக் குறிக்கும் ஒரு பழமையான சமசுகிருதப் பெயராகும். இரிக்கு வேதத்தில், இவர்கள் விசுவாமித்திர முனிவரின் வழித்தோன்றல்களாக முதன்முதலில் குறிப்பிடப்படுகிறார்கள்.
புவியியல்
[edit | edit source]கோதாவரி, கிருட்டிணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின்படி நாட்டின் 8-ஆவது பெரிய மாநிலம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இது இந்தியாவின் 10-ஆவது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது.
வானிலை
[edit | edit source]ஆண்டின் பெரும்பகுதிக்கு இங்கு வானிலை வெப்பமாகவே இருக்கும். கடற்கரைப் பகுதிகளில் அதிக ஈரப்பதமும், உட்புறப் பகுதிகளில் ஒப்பீட்டளவில் வறண்ட சூழலும் நிலவும். சூன் மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவமழையும், அக்டோபர் மாதத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழையும், இம்மாநிலத்தின் மழைசார் விவசாயத்திற்குத் தேவையான போதுமான மழைப்பொழிவை வழங்குகின்றன. ஒப்பீட்டளவில் குளிர்ச்சியான சூழல் நிலவும் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலம், இங்குச் சுற்றுலா மேற்கொள்ளச் சிறந்த நேரமாகும். ஏப்ரல் முதல் சூன் வரையிலான மாதங்கள் மிகவும் வெப்பமான மாதங்களாக அமைகின்றன.
மத நம்பிக்கைகள்
[edit | edit source]கலாச்சாரம்
[edit | edit source]நிகழ்ச்சி கலைகள்
[edit | edit source]தற்காப்பு கலைகள்
[edit | edit source]பாரம்பரிய ஆடைகள்
[edit | edit source]பொருளாதாரம்
[edit | edit source]பார்வையாளர் தகவல்=
[edit | edit source]பேச்சு மொழி
[edit | edit source]சென்று அடைதல்
[edit | edit source]வானூர்தி வழியாக
[edit | edit source]இரயில் வழியாக
[edit | edit source]சாலை வழியாக
[edit | edit source]கடல் வழியாக
[edit | edit source]சுற்றுலா வருதல்
[edit | edit source]பொது போக்குவரத்து
[edit | edit source]தனியார் வாகனங்கள்
[edit | edit source]சுற்றிக் காணுதல்
[edit | edit source]- திருப்பதி ஏழுமலையான் கோவில்,
- விசாகப்பட்டினம்,
- விஜயவாடா,
- நெல்லூர்,
- சித்தூர்,
- அனந்தபூர்,
- கர்நூல்,
- கடப்பா,
- காளஹஸ்தி,
- புட்டபர்த்தி,
- செக்கந்தராபாத்,
- கல்குளம்.
ஈர்ப்புகள்
[edit | edit source]வரலாற்று நினைவுச்சின்னங்கள்
[edit | edit source]சூழல்-சுற்றுலா
[edit | edit source]செய்ய வேண்டியவை
[edit | edit source]பண்டிகைகள்
[edit | edit source]விளையாட்டு
[edit | edit source]சாகச விளையாட்டு
[edit | edit source]வாங்குதல்
[edit | edit source]சாப்பிடுதல்
[edit | edit source]இன உணவு
[edit | edit source]குடித்தல்
[edit | edit source]தூங்குதல்
[edit | edit source]பாதுகாப்பாக இருத்தல்
[edit | edit source]ஆரோக்கியமாக இருத்தல்
[edit | edit source]மரியாதை அளித்தல்
[edit | edit source]மரபுகள் மற்றும் சமூக ஆச்சாரம்
[edit | edit source]தொடர்பு கொள்ளுதல்
[edit | edit source]அடுத்த பயணம்
[edit | edit source]