Wy/ta/குருவாயூர்
குருவாயூர் என்னும் திருத்தலம், இந்திய மாநிலமான கேரளத்தில் உள்ளது. திருச்சூர் மாவட்டத்திலுள்ள இவ்வூர், கிருஷ்ணன் கோயிலுக்காக அறியப்படுகிறது. இந்த ஊருக்கு வருவோர், தொடர்வண்டிகளில் வந்தால் திருச்சூர் நிலையத்தில் இறங்கி, பேருந்தின் மூலமோ, உள்ளூர் பயணியர் தொடர்வண்டி மூலமோ வந்தடையலாம்.
தலச்சிறப்பு
[edit | edit source]குருவும் வாயுவும் கிருஷ்ணன் சிலையை இங்கு நகர்த்திக் கொண்டுவந்ததால் குருவாயூர் என்று அழைக்கப்படுவதாக புராணக் குறிப்புகள் உள்ளன. குரவைக் கூத்து நடைபெற்ற ஊர் என்று சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கருதுவோர் உளர்.
பேச
[edit | edit source]இங்குள்ள மக்கள் மலையாள மொழியைப் பேசுகின்றனர். பெரும்பாலானோர் தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசினால் புரிந்துகொண்டு பதிலளிக்கின்றனர். தமிழகத்து பயணிகளின் வசதிக்காக பல கடைகளில் மலையாளம், ஆங்கிலத்துடன், தமிழிலும் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கோவிலில் அறிக்கைப் பலகைகள் மலையாளம், தமிழ், ஆங்கிலம் என மும்மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.
போக்குவரத்து
[edit | edit source]சாலைவழி
[edit | edit source]சென்னை, பெங்களூர், மங்களூர், கோயம்புத்தூர், பாலக்காடு, எர்ணாகுளம், கொடுங்கல்லூர், பொள்ளாச்சி, மதுரை, ஒற்றப்பாலம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து குருவாயூருக்கு அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. உள்ளூரில் சுற்றிப் பார்க்க விரும்புவோர், டாக்சிகளை வாடகைக்கு பிடித்துக் கொள்ளலாம்.
ரயில் வழி
[edit | edit source]வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தொடர்வண்டியில் வருவோர், திருச்சூர் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து குருவாயூருக்கான பயணியர் வண்டியின் மூலம் குருவாயூருக்கு வரலாம். திருச்சூர் தொடர்வண்டி நிலையத்தின் வாயிலில் நிற்கும் பேருந்துகளின் மூலமும் குருவாயூரை வந்தடையலாம்.
செய்யக் கூடியவை
[edit | edit source]- இசைக்கச்சேரி: குருவாயூர் கோயிலுக்குள் உள்ள மேல்பத்தூர் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இசைக் கச்சேரியை ரசிக்கலாம்.
- திருக்கோயில் வழிபாடு: குருவாயூரப்பன் கோயிலில் வழிபட்டவுடன், அருகிலுள்ள மம்மியூர் மகாதேவர் கோயிலிலும் வழிபட வேண்டும். குருவாயூரில் வெங்கடாசலபதி கோயிலும், பகவதி அம்மன் கோயிலும், பார்த்தசாரதி கோயிலும் உள்ளன. அக்கோயில்களுக்கும் சென்று வழிபடலாம். அருகிலுள்ள திருத்தலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- கடைகள்: கடைகளில் ஆன்மிகப் பொருட்களும், விளையாட்டுப் பொருட்களும் விற்பனையாகின்றன.
தங்குமிடங்கள்
[edit | edit source]குருவாயூரில் கோயிலுக்கு அருகிலேயே குறைந்த, நடுத்தர, அதிக வாடகையுள்ள தங்குமிடங்கள் உள்ளன. தென்னிந்திய வடவிந்திய உணவுகளும் பரிமாறப்படுகின்றன.