Wy/ta/மதுரை
மதுரை (Madurai) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும்.முன்னாளில் 'மதுரா' என அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. வைகை நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே ஒரு முக்கிய குடியிருப்பு மையமாகவும் பெரிய நகரமாகவும் திகழ்கின்றது.உலகின் மிக நீண்ட காலமாகத் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.. ஏறத்தாழ கி.மு. 600-ஆம் ஆண்டில், பாண்டியப் பேரரசின் தலைநகராகக் ’கொற்கை’ விளங்கியது. பின்னர், முதலாம் நெடுஞ்செழியனின் ஆட்சிக்காலத்தில் அத்தலைநகரம் ’கூடல்’ என்று அழைக்கப்பட்ட இன்றைய மதுரைக்கு மாற்றப்பட்டது.
இந்நகரம் பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் பண்டைய மரபுசார் தமிழ் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட கோவில்களுக்கு பெயர் பெற்றது. இது இந்தியாவின் முக்கிய இந்துத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.இந்நகரம் "கூடல் நகரம்", "மல்லிகை மாநகரம்", "கோவில் நகரம்", "தூங்கா நகரம்" ”நான்மாடக்கூடல்” என்றும் அழைக்கப்படுகிறது .
புரிதல்
[edit | edit source]மதுரை இந்தியாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இதன் வரலாற்றின் பெரும்பகுதி பாண்டிய மன்னர்களின் ஆட்சியின் கீழேயே அமைந்திருந்தது. இந்நகரம் தனது செழுமையான பாரம்பரியத்திற்காகவும், 'சங்கங்கள்' வாயிலாகத் தமிழ் மொழியை வளர்த்தெடுத்தமைக்காகவும் பெரிதும் புகழ்பெற்றது. கி.மு. 4-ஆம் நூற்றாண்டு வாக்கில் இருந்தே இந்நகரம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கிரேக்க, உரோமானிய மற்றும் அரேபியர்களின் பண்டைய வரலாற்று ஆவணங்களிலும் இந்நகரம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது தவிர, நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவிலின் கோபுரங்களில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பித்தல் மற்றும் வர்ணம் பூசுதல் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஏப்பிரல் 2009-இல் இக்கோவிலின் குடமுழுக்கு எனப்படும்'மகா கும்பாபிஷேகம்' வெகு சிறப்பாக நடைபெற்றது. பொதுவாக, இத்தகைய கும்பாபிஷேக நிகழ்வுகள் 14 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதற்கும் மேலான இடைவெளியில் நடத்தப்படுவது வழக்கம். இக்கோவிலின் கோபுரங்களிலும், கோவில் வளாகத்திற்குள்ளும் எண்ணற்ற வியக்கத்தக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோவிலின் பிரகாரத்தில் அமைந்துள்ள தூண்களில், 'யாளி' எனப்படும் - டிராகன் போன்ற தோற்றமுடைய ஒரு கற்பனை உயிரினத்தின் - சிற்பங்களை நீங்கள் அவசியம் கண்டு இரசிக்க வேண்டும். மேலும், கோவிலின் மேற்கூரையை அண்ணாந்து நோக்கும்போது, அதனை அலங்கரிக்கும் அழகிய பண்டைய ஓவியங்களைக் காணும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.
மதுரை, தென் திசை நோக்கிப் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு முக்கிய இடைத்தங்கல் மையமாகவும், அதே வேளையில் ஒரு முக்கிய உள்ளூர் வர்த்தக மையமாகவும் திகழ்கிறது.
மொழி
[edit | edit source]இந்நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் தாய்மொழி ’தமிழ் ’ஆகும். மலையாளம், கன்னடம்,சௌராஷ்டிரம்,ஆங்கிலம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்.
எப்படிச் செல்வது
[edit | edit source]விமானம் வழியாக
[edit | edit source]மதுரை மாநகரில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை, மும்பை, ஐதராபாத், டெல்லி, பெங்களூரு, கொழும்பு, துபாய், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை உள்ளது. இவ்விமான நிலையம், நகரின் மையப்பகுதியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தொடருந்து வழியாக
[edit | edit source]மதுரை நகரின் மத்தியில் "மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம்" அமைந்துள்ளது. நாட்டின் அனேக பகுதிகளுக்கும் இங்கிருந்து தொடர்வண்டி சேவை உள்ளது.
சாலை வழியாக
[edit | edit source]- தே. நெ. 44 (ஸ்ரீநகர் - டெல்லி - பெங்களூரு - மதுரை - கன்னியாகுமரி),
- தே. நெ. 38 (வேலூர் - திருச்சி - மதுரை - தூத்துக்குடி),
- தே. நெ. 85 (தேனி - மதுரை - ராமேஸ்வரம்)
ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் மதுரை மாநகரை மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன.
பேருந்து வழியாக
[edit | edit source]தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மதுரை மாநகரில் உள்ளூர் பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும் வெளியூர்களுக்கு, புறநகர மற்றும் தொலைதூர சொகுசு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. தனியார் ஆம்னி பேருந்துகளும் மதுரைக்கும் பிறநகரங்களுக்கும் இடையே இயங்குகின்றன.
மதுரை மாநகரில் 3 பேருந்து நிலையங்கள் உள்ளன. அவை:
- எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்): இங்கிருந்து தென் மாவட்டங்கள், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமேஸ்வரம், காரைக்குடி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்படுகிறது.
- ஆரப்பாளையம் பேருந்து நிலையம்: இங்கிருந்து தேனி, கம்பம், திண்டுக்கல், சேலம், ஒட்டன்சத்திரம், பழனி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன .
- பெரியார் பேருந்து நிலையம்: உள்ளூர் பேருந்துகளின் முனையமாக இப்பேருந்து நிலையம் செயல்படுகிறது.
மருத்துவமனை
[edit | edit source]மதுரையில் இராசாசி அரசு மருத்துவமனை உள்ளது.
பார்க்க
[edit | edit source]கோயில்கள்
[edit | edit source]- திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்
- பழமுதிர் சோலை முருகன் கோயில்
மற்ற இடங்கள்
[edit | edit source]- திருமலை நாயக்கர் மஹால்
- காந்தி அருங்காட்சியகம்
சமணத் தலங்கள்
[edit | edit source]- கீழக்குயில்குடி
- கொங்கர் புளியங்குளம்
- மாங்குளம்
- அரிட்டாபட்டி
- அழகர் மலை
மற்ற இடங்கள்
[edit | edit source]அருகில் உள்ள இடங்கள்
[edit | edit source]- பழனி
- திண்டுக்கல்
- வத்தலகுண்டு
- கொடைக்கானல்
- தேனி