Wy/ta/ஆத்தூர்
ஆத்தூர் (Attur) சேலம் மாவட்டத்திலுள்ள முதல் நிலை நகராட்சி ஆகும். இது வசிஷ்ட்ட நதியின்(வற்றாத ஆறு எனப்பொருள்) தென் புறம் அமைந்துள்ளது. பேரூராட்சியாக இருந்த இந்நகரம் 1965 சனவரி நான்காம் தேதி நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது.
வரலாறு
[edit | edit source]இந்த ஊரை, கெட்டி முதலி மரபினர் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, இங்கிருக்கின்ற கோட்டையைக் கட்டினார்கள். கி.பி.1689ல் மைசூரை ஆண்ட சிக்க தேவராயன் இப்பகுதியைப் பிடித்தான். பின்னர் இது அயிதர் அலியின் ஆட்சிப் பகுதியாக மாறியது. 1792ல் மூன்றாம் மைசூர் போரின் போது ஆத்தூர், திப்புவிடமிருந்து ஆங்கிலேயர் வசம் மாறியது. ஆங்கிலேயர் ஒரு ராணுவத் தொகுப்பை இங்கு 1799 ஆம் ஆண்டு வரை வைத்திருந்தார்கள். பிறகு 1824 வரை ஆயுதங்களின் கிட்டங்கித் தளமாக விளங்கியது.
செல்ல
[edit | edit source]சாலை வழியாக
[edit | edit source]தேசிய நெடுஞ்சாலை 68 ஆத்தூர் வழியாக செல்லும் நெடுஞ்சாலை ஆகும். இதன் மூலமாக ஆத்தூரை அடையலாம்.
தொடர்வண்டி மூலமாக
[edit | edit source]சென்னை எழும்பூரிலிருந்து விழுப்புரம் வழியாக செல்லும் தொடருந்து ஆத்தூர் வழியாக செல்லும். காரைக்காலிலிருந்து விருதாச்சலம் வழியாக பெங்களூர் செல்லும் தொடருந்தும் ஆத்தூரைக் கடந்து செல்லும்.
விமானத்தின் மூலமாக
[edit | edit source]சேலம் மாவட்டத்திற்கு என்று தனியாக விமான நிலையங்கள் இல்லை. திருச்சி மற்றும் கோவை ஆகியவை அருகில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள் ஆகும்.
பார்க்க
[edit | edit source]- ஆத்தூர் கோட்டை
- திரெளபதி அம்மன் கோவில்
- கைலாச நாதர் கோவில்
- காய நிர்மலேசுவரர் கோவில்
ஆத்தூர் கோட்டை
[edit | edit source]ஆத்தூர் கோட்டையை, கெட்டி முதலி மரபினர் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டனர். இவர்களே, ஆத்தூரில் கோட்டையைக் கட்டினார்கள். இக்கோட்டை 62 ஏக்கர்கள் அளவுடையது.(250,000 சதுரமீட்டர்கள்/m2) கோட்டையின் சுவர்கள் ஏறத்தாழ 30அடி (9.1 மீ) உயரமும், 15 (4.6 மீ) அடி அகலமும் உடையதாக உள்ளது. இக்கோட்டை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக் கட்டுபாட்டில் இருக்கிறது.
படக்காட்சியகம்
[edit | edit source]-
தென்புறத்தோற்றம்
-
தென்புற மதில்
-
தென்புறவாயில்
-
மதில்காவல்
-
பெருங்கிடங்கி
-
போர் கிடங்கிகள்
உண்ண
[edit | edit source]சைவம்
[edit | edit source]- அடையார் ஆனந்த பவன்
- சரவண பவன்
- கெளரி சங்கர்
- அய்யர் கடை - பஞ்சு பரோட்டா(அம்மம் பாலையம், சாமியார் கிணறு)
- பாரதி மெஸ் (புதன் அன்று மட்டும் அசைவம்)
- காந்திநகர் பூங்காவிற்கு அருகில் மாலை நேரங்களில் திறக்கப்படும் தள்ளுவண்டி கடைகளில், சேலத்தின் பிரசித்திப்பெற்ற உணவான தட்டுவடை செட் உண்ணலாம்.
அசைவம்
[edit | edit source]- மைதிலி மெஸ்
- மங்கள விலாஸ்
- சக்தி
- சிக் பிளாஸ்ட் (மேலைநாட்டு உணவுகளுக்கு)