அடைகாப்பகம்:அறிமுகம்
Appearance
Outdated translations are marked like this.
விக்கிமீடியா அடைக்காப்பகம் என்றால் என்ன?
- 'விக்கிமீடியா அடைக்காப்பகம், 2 ஜூன் 2006 அன்று நிறுவப்பட்டது, இது விக்கிப்பீடியா மற்றும் பிற திட்டங்களை.இயக்குகிற விக்கிமீடியா அறக்கட்டளை.யால் இயக்கப்படுகிற' ஒரு விக்கி-சார்ந்த இணையதளம் ஆகும்.
உங்கள் விக்கியைத் தொடங்குங்கள்!
- அடைகாப்பகம் என்பது, [[Special:MyLanguage/Incubator:ISO 639|அங்கீகரிக்கப்பட்ட மொழியில் அமையும் ஒரு விக்கிமீடியா திட்டத்தின் (விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிநூல்கள், விக்கிசெய்தி, விக்கிமேற்கோள் மற்றும் விக்கிப்பயணம்) இன்னும் தனியான துணைக்களம் உருவாக்கப்படாத ஒரு குறிப்பிட்ட மொழிப் பதிப்பிற்கான சமூகத்தை உருவாக்கிக்கொள்ள யார் வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய ஒரு தளமாக சேவை செய்கின்றது. அடைகாப்பகத்தில் உள்ள இத்தகைய "ஆய்வு விக்கிகள்", மற்ற நிஜ விக்கிகளைப் போலவே பயன்படுத்தப்படக்கூடியவை. சமூகம் விரும்பினால், தங்களுக்கு எனத் தனியான கோரிக்கை செயல்முறை மூலம் புதிய மொழிகளுக்கான துணைக்களத்திற்கு மாறக் கோரலாம். இதற்கான முடிவை மொழிக்குழு எடுக்கும்.
- விக்கிப்பல்கலைக்கழகமும், விக்கிமூலமும் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. அதாவ்து beta.wikiversity.org மற்றும் wikisource.org ஆகியவற்றிலும் இயங்குகின்றன.
- விக்கிமீடியா அடகாப்பகம் என்பது இலவச கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா போன்ற ஒரு உண்மையான உள்ளடக்கத் திட்டமோ, அல்லது வெவ்வேறு விக்கிமீடியா அறக்கட்டளை திட்டங்களை ஒருங்கிணைக்கும் மேல்-விக்கி போன்ற ஒரு நிறுவனத் திட்டமோ அல்ல என்ற பொருளில் தனித்துவமானது.
- அடைகாப்பகத்தில் வாசிக்கும்போதோ, அதைப் பயன்படுத்தும்போதோ அல்லது அதற்கு பங்களிக்கும்போதோ, தயவுசெய்து தனியுரிமைக் கொள்கை மற்றும் பொதுவான பொறுப்புத்துறப்பு ஆகிய பக்கங்களைப் படிக்கவும்.
- அடைகாப்பகத்தின் அகவியல்பான செயல்பாடுகள் குறித்து மேலும் அறிய விரும்பினால், உதவி:அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தில் உள்ள நமது அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் படிக்கலாம். பிற உதவிகளுக்கு உதவி:உள்ளடக்கம் பக்கத்தைப் பார்க்கவும்.
விக்கிமீடியா அடைகாப்பகம் என்பது என்னவல்ல?
- மூடிய துணைக்களங்கள் பெரும்பாலும், அவை ஒரு சமூகத்தை மீண்டும் உருவாக்க முடியும் என்பதால், அடைகாப்பகத்துக்கு மாற்றப்பட்டாலும், அடைகாப்பகம் கைவிடப்பட்ட திட்டங்களை வழங்கும் ஒரு கொட்டிவைப்புத் திட்டம் அல்ல.
- அடைகாப்பகம் ஒரு சிறப்புத் திட்டமாக இருந்தாலும், அதை "திரைக்குப் பின்னால்" உள்ள திட்டமாகக் கருதக்கூடாது.