Jump to content

Wy/ta/கோயம்புத்தூர்

From Wikimedia Incubator
< Wy | ta
(Redirected from Wy/ta/கோவை)
Wy > ta > கோயம்புத்தூர்
Wy/ta/கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் (Coimbatore) இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாடு மாநிலத்தில் 2 இருமடி ஆயிரம் மக்கள் வசிக்கும் ஒரு தொழில்துறை நகரமாகும். பெரும்பாலும் தென்னிந்தியாவின் மான்செசுட்டர் அல்லது டெட்ராய்டு நகரங்களுடன் ஒப்பிடப்படுகிறது. இந்நகரம் ஓடி-எக்கிப்பொறி மற்றும் பல்வேறு பொறியியல் பொருட்களின் உற்பத்திக்குப் பிரபலமான நகரமாகும். இது கோவை மாநகரம் என்றப் பெயராலும் அழைக்கப்படுகிறது.

புரிதல்

[edit | edit source]

பல்வேறு தொழில்கள், பொறியியல் பொருட்கள், நெசவு ஆலைகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார வசதிகள், இனிமையான வானிலை, நட்புக் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றிற்கு இந்நகரம் பெயர் பெற்றதாகும். கோயம்புத்தூர் நகரத்தில் வடக்கு மற்றும் மேற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பிடத்தக்கச் சிறுபான்மையினர் வசிக்கின்றனர். பல்வேறு இனக், கலாச்சார மற்றும் மதப் பின்னணியில் உள்ள மக்கள் ஒன்றாக வாழ்வதால் இந்நகரம் ஒரு தனிச்சார்பற்ற நகரமாகப் பார்க்கப்படுகிறது. இந்நகரத்தில் வாழும் மக்கள் நட்பு மற்றும் மரியாதைக்குரியவர்களாகவும் வாழ்கின்றனர்.

கோயம்புத்தூர் ஒரு மரபுவழியில் ஈடுபாடு கொண்டுள்ள நகரமாகும். செல்வத்தின் அடிப்படையில் நகரம் வளர்ந்துள்ளது. கோயம்புத்தூர் மக்கள் அனைவரிடமும் மரியாதைக் காட்டுபவர்களாய்ப் பெயர் பெற்றுள்ளார்கள்.

கோடைகாலத்தைத் தவிர, ஆண்டு முழுவதும் இனிமையான, மிதமான வானிலையைக் கொண்ட இந்த நகரம், ஓர் உல்லாச நகரத்தைப் போன்றதாகும். மாநில அரசாங்கத்தின் புதிய முயற்சிகளைச் செயல்படுத்தும் ஒரு தகவல் தொழில்நுட்ப மையமாகவும் கோயம்புத்தூர் திகழ்கிறது.

மொழி

[edit | edit source]

இந்நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும். மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்.

எப்படி செல்வது

[edit | edit source]

கோயம்புத்தூர் நகரில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, மற்றும் பொள்ளாச்சி சாலை என ஆறு பிரதான சாலைகளும், சேலம்-கொச்சி நெடுஞ்சாலை (544), பெங்களுர் நெடுஞ்சாலை (948), சிதம்பரம் நெடுஞ்சாலை (81), குண்டுலுபேட்டை நெடுஞ்சாலை (181), நாகப்பட்டிணம் நெடுஞ்சாலை (83) என ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன. இந்த நகரின் பல்வேறு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை இணைக்கும் ஒரு தொடர்ச்சாலையாக ஒரு புறவழிச்சாலையும் உள்ளது.

வானூர்தி

[edit | edit source]
கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஒரு பகுதி

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

[edit | edit source]

கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் பீளமேட்டில் உள்ளது. இது இந் நகரத்தின் பிரதான வானூர்தி நிலையமாகச் செயல்படுகின்றது. 1940 ஆம் ஆண்டு முதல் இந்த வானூர்தி நிலையம் செயல்படத் துவங்கியது. 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற தகுதியைப் பெற்றது. இந்திய விமான நிலைய ஆணையம் மூலம் இயக்கப்படும் இந்த வானூர்தி நிலையத்திலிருந்து முக்கிய இந்திய நகரங்களுக்கும் சார்சா, சிங்கப்பூர் மற்றும் கொழும்பு போன்ற வெளி நாட்டு நகரங்களுக்கும் வானூர்திச் சேவை உள்ளது. வானூர்திகள் இயக்கத்தின் அடிப்படையில் கோயம்புத்தூர் வானூர்தி நிலையம் இந்தியாவின் 15 ஆவது பெரிய வானூர்தி நிலையமாகும்.

தொடருந்து நிலையம்

[edit | edit source]

கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

[edit | edit source]

இது கோயம்புத்தூர் நகரத்தின் முக்கியமான தொடருந்து நிலையமாகும். அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத்து, மும்பை, புது தில்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் கோயம்புத்தூர் நகரம் தொடருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. போத்தனூர் சந்திப்புத் தொடருந்து நிலையம் மற்றும் கோயம்புத்தூர் வடக்கு சந்திப்புத் தொடருந்து நிலையம் ஆகிய மேலும் இரண்டு தொடருந்து நிலையங்களும் இங்குள்ளன.

கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம்

[edit | edit source]

இது கோயம்புத்தூர் நகரத்தின் முக்கியமான தொடருந்து நிலையமாகும். அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஐதராபாத்து, மும்பை, புது தில்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் கோயம்புத்தூர் நகரம் தொடருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. போத்தனூர் சந்திப்பு தொடருந்து நிலையம் மற்றும் கோயம்புத்தூர் வடக்கு சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகிய மேலும் இரண்டு தொடருந்து நிலையங்கள் இங்குள்ளன.

பேருந்து

[edit | edit source]
காந்திபுரம் பேருந்து நிலையம்

கோயம்புத்தூரில் ஐந்து முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பிற நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து சேவைகள் கிடைக்கின்றன. அனைத்து ஐந்து பேருந்து நிலையங்களும் நாள் முழுவதும் உள்ளூர் பேருந்து சேவைகளுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. வெளியூர் செல்லும் பேருந்துகள் காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

சிங்காநல்லூர் பேருந்து நிலையம்
மதுரை, திருச்சி, கரூர், தஞ்சாவூர் மற்றும் அருகிலுள்ள நகரங்களிலிருந்து வரும் பேருந்துகள்.
காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையம்
திருப்பூர், ஈரோடு, சேலம், தாராபுரம், கோபிசெட்டிபாளையம், மேட்டூர், சத்தியமங்கலம் பேருந்துகள்
காந்திபுரம் விரைவுப் பேருந்து நிலையம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள், பிற மாநில நெடுந்தூர பேருந்துகள்
உக்கடம் பேருந்து நிலையம்
பாலக்காடு, திருச்சூர், பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை பேருந்துகள்
மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம்
மேட்டுப்பாளையம், உதகமண்டலம்

போக்குவரத்து வசதி

[edit | edit source]

கோயம்புத்தூரை சுற்றி வருவது எளிது. பொது போக்குவரத்து பேருந்துகள், மூன்று சக்கர இழுவைகள் மற்றும் ஏராளமான வாடகை சீருந்து வசதிகள் உள்ளன. சீருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ₹40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிலோமீட்டருக்கு ₹16/₹12 என்ற ஃப்வகையிலும் கட்டணங்கள் மாறுபடுகின்றன. அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் பிற தனியார் துறையினரால் இயக்கப்படும் பேருந்துகள் மூலமும் பொது போக்குவரத்து வசதி கிடைக்கிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்

[edit | edit source]
  • ஜி. டி. கார் அருங்காட்சியகம்-அவினாசி சாலையில் ஜி.டி. நாயுடு அறக்கட்டளையால் துவக்கி நடத்தப்பட்டுவருகிறது. சுமார் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த 60 வகையான சீருந்துகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • ஜி.டி. அறிவியல் அருங்காட்சியகம்- பிரதான கட்டிடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ளது. ஜிடி நாயுடுவின் கண்டுபிடிப்புகள், அவர் சேகரித்த பல்வேறு அறிவியல் உபகரணங்கள், இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள் போன்ற மிகவும் அரிதான பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
  • வ. உ. சி. பூங்கா- நகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 335 பறவைகள், 106 பாலூட்டிகள் மற்றும் 54 ஊர்வன விலங்குகள் உள்ளிட்ட 890 விலங்குகள் இருந்தன.
  • சிங்காநல்லூர் குளம் - சிங்காநல்லூர் குளம் என்றழைக்கப்படும் சிங்காநல்லூர் ஏரி கோவை நகரில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்றாகும். சுமார் 288 ஏக்கர் பரப்பளவில் இந்த குளம் சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு நீர்க்காக்கை, நாமக்கோழி போன்ற பறவைகள் காணப்படுகின்றன. அக்டோபர் மாதத்தில் கூழைக்கடாப் பறவைகளும் வருகின்றன. 110- எண்ணிக்கைக்கும் அதிகமான பறவையினங்கள் இங்கு காணப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • கோவைக் குற்றாலம் - கோயம்புத்தூர் நகரின் மேற்கே 35 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சிறுவாணி மலைகளின் கிழக்குச் சரிவில் அடிவாரத்துக்கு சற்று மேலே அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
  • காசு வன அருங்காட்சியகம்- நடுவண் அரசினால் நிருவகிக்கப்படும் ஓர் இயற்கை வரலாறு அருங்காட்சியகம். காடுகள் மற்றும் அவற்றின் வனவிலங்குகள் தொடர்பான கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பார்க்க வேண்டிய கோயில்கள்

[edit | edit source]
பேரூர் பட்டீஸ்வரர் கோயில்
  • ஆதர் சமாத்து பள்ளிவாசல்- நூறு ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற பள்ளிவாசல்.
  • அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் - ஒரு பழைமையான் சிவன் கோயில்.
  • மருதமலை முருகன் கோயில்.-கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் முருகனின் ஏழாம் படைவீடாக அமைந்துள்ளது.
  • வெள்ளங்கிரி மலை சிவன் கோயில். - தெற்கு கைலாசம் என அறியப்படுகிறது.
  • குழந்தை இயேசு தேவாலயம்- கோவைப்புதூரில் உள்ள இத்தேவாலயத்திற்கு வியாழக்கிழமைகளில் நவநாள் விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.
  • ஆஞ்சநேயர் கோவில்- பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது.
  • அனுவாவி சுப்பிரமணியர் கோயில்ல் - கோவையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், பெரிய தடாகத்தில் கணுவாய் என்ற இடத்தில் அமைந்துள்ளது.[1][2] இந்த கோயில் உண்மையில் மருதமலை மலைகளின் வடக்குப் பக்க சரிவில் அமைந்துள்ளது. கோயிலின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை அகலமான சுமார் 500 படிகள் உள்ளன
  • ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை கோயில் - ஆசியா கண்டத்திலேயே ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப்பெரிய விநாயகர் சிலை, கோவை புளியங்குளத்தில் உள்ளது
  • ஈச்சனாரி விநாயகர் கோயில் - கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.
  • சிறீ நாக சாய் கோயில் - சாய்பாபாவிற்காக கோயம்புத்தூரில் அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்து கோவில்.
  • சிறீ ரங்கநாதர் கோயில் - மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில்
  • தென் திருப்பதி - மேட்டுப்பாளையம் அடுத்த தென் திருப்பதி திருமலையில், வேங்கடேசுவர வாரி சுவாமி கோவில் உள்ளது.

ராம்நகரில் உள்ள ஐயப்பன் பூசை சங்கம், புதிய சித்தபுதூரில் உள்ள ஐயப்பன் கோயில், சிருங்கேரி சாரதா கோயில், சாய்பாபா காலனியில் உள்ள சீரடி சாய் பாபா கோயில், காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ராம்நகரில் உள்ள கோனியம்மன் கோயில் மற்றும் ராமர் கோயில் போன்றவையும் பார்க்கப்படவேண்டிய கோயில்களில் அடங்கும்.

கேளிக்கைகள்

[edit | edit source]

கோயம்புத்தூரில் மூன்று நல்ல நீர் விளையாட்டுப் பூங்காக்கள் உள்ளன. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ₹300 முதல் 350 வரையும் குழந்தைகளுக்கு தலைக்கு ₹50–100 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.

  • பிளாக் தண்டர் - நீலகிரிக்கு அருகிலுள்ள மேட்டுப்பாளையத்தில் அவினாசி சாலையில் அமைந்துள்ள நீர் விளையாட்டுப் பூங்கா.
  • கோவை கொண்டாட்டம் - தண்ணீர் நடனம், அலை குளம், மோது கார்கள், மலை ஏற்றம், காணொளிக் கூடம் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் கொண்ட ஒரு பொழுதுபோக்குப் பூங்கா.
  • மகாராசா நீர் விளையாட்டுப் பூங்கா கோவைக்கு அருகில் நீலம்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • கோவை ஈசா யோக மையம் - கோயம்புத்தூருக்கு மேற்கே 30 கி.மீ தொலைவில் வெள்ளியங்கிரி, மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
  • பந்தய மைதானம் - உணவு, நடைபயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்கான இடம்

சந்தை

[edit | edit source]

நகரம் முழுவதும் தன்னியக்க வங்கி இயந்திரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆர்.எசு.புரம், திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலை போன்ற வணிகப் பகுதிகளில் குவிந்துள்ளன.

கோயம்புத்தூரில் ஆர்.எசு.புரம், கிராசு-கட் சாலை மற்றும் நகர அரங்கப் பகுதி (ஒப்பனக்காரத் தெரு, பிக் பசார் தெரு, ராசா தெரு) பகுதிகளில் வணிக நடவடிக்கைகள் குவிந்துள்ளன. தென்னிந்தியாவின் மான்செசுட்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், நெசவுத் துணிகளுக்குப் பிரபலமானது. கிராசு-கட் சாலையில் காஞ்சிபுரம் மற்றும் பனாரசு பட்டு புடவைகள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. கோயம்புத்தூர் கிராசு-கட் சாலை மற்றும் நகர அரங்கப் பகுதியில் ஏராளமான நகைக் கடைகளும் அமைந்துள்ளன. பிரபலமான வணிகப் பெயர் பெற்ற ஆடை நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் டி.பி. சாலையில் உள்ளன. நகரத்தில் பல பெரிய துணியகங்கள் (ஆர்.எம்.கே.வி, போத்தீசு, தி சென்னை சில்க்சு போன்றவை) கோயம்புத்தூரில் அமைந்துள்ளன.

  • புரூக்பீல்டு பேரங்காடி - கோயம்புத்தூரில் உள்ள மிகப்பெரிய பேரங்காடியான புரூக் பாண்டு சாலையில் துணிகள், ஆடைகள், காலணி கடைகள், உணவகங்கள் துணியகங்கள் போன்ற வணிகப்பெயர் பெற்ற கடைகள் உள்ளன. இங்கு ஆறு திரைகள் கொண்ட பல்கூட்டுத் திரையரங்கும் உள்ளது.
  • நீலகிரிசு - தென்னிந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனைக் கடைகள் சங்கிலித் தொடராகும். ஆர்.எசு. புரம் மற்றும் திருச்சி சாலையில் இந்நிறுவனத்தின் விற்பனை நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான உயர்நிலை உணவுப் பொருட்கள் இங்கு கிடைக்கும். பல்வேறு வகையான மளிகை பொருட்கள், பொதுப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களையும் இவ்விடங்களில் வாங்கலாம். குன்னூரில் தயாரிக்கப்படும் பிரத்தியேக வெண்ணைக் கட்டிகள் இந்நிறுவன விற்பனையகங்களில் கிடைக்கும்.
  • சிறீ கிருட்டிணா சுவீட்சு இந்திய இனிப்புகளில் நிபுணத்துவம் பெற்றது மற்றும் இதன் மைசூர்பாக்கு எனப்படும் இனிப்பு பிரபலமானதாகும்.
  • லூலூ பேரங்காடி - அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில் வளாகத்தில் லூலூ பேரங்காடி அமைந்துள்ளது.

உணவு

[edit | edit source]

கோயம்புத்தூருக்கு வரும்போது ​​உணவையும் சிறுவாணி நீரையும் ருசித்துப் பார்ப்பது ஓர் இனிய அனுபவமாகும். ஊட்டி, பெங்களூரு அல்லது கேரளா செல்லும் வழியில் ஓய்வெடுக்க கோயம்புத்தூர் ஒரு சிறந்த நிறுத்தமாகும். அன்னபூர்ணா, சிறீ ஆனந்தா, ஆர்யாசு, கோவை பிரியாணி விடுதி, அங்கன்னன், அஞ்சப்பர், சம்பூர்ணா, ராயப்பாசு மற்றும் தலப்பாசு உணவகங்களில் அசைவ உணவுகள் கிடைக்கும். நகரத்தில் தொடங்கப்பட்ட இனிப்புச் சங்கிலி. மேற்கத்திய காபி பப்கள் மற்றும் துரித உணவு விற்பனை நிலையங்கள் சப்வே, டோமினோசு, பீசா அட்டு, பாசுகின் ராபின்சு, மேரி பிரவுன், பாரிசுட்டா, கஃபே காபி டே மற்றும் பூமராங்கு ஆகியவையும் தேவப்படும் உணவுகளை வழங்குகின்றன.

  • அச்மீர் - நகர அரங்க மணீக்கூண்டுக்கு அருகில் . சிறந்த ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சி பரிமாறப்படுகிறது. முட்டைப் பொரியலும் கோழி வறுவலும் இக்கடையின் சிறப்புகள்.
  • புரூக்ஃபீல்டு பிளாசா உடை முதல் உணவு வரை அனைத்தும் இங்கு கிடைக்கும்.
  • சைனா டவுன் - நேரு அரங்கம், பூங்கா வாயிலுக்கு இடையே உள்ள சாலையில் உள்ளது. சில்லி போர்க்கு, டிராகன் சிக்கன் மற்றும் அவர்களின் லம்ஃபு சூப் போன்ற சீன உணவுகள் கிடைக்கும்.
  • தாபா தாபாக்கள் கோயம்புத்தூரில் பிரபலமானவை. இவற்றில் பல்வேறு வகையான உணவுகள் மற்றும் இணைக்கப்பட்ட மதுபானம் அருந்தகமும் உள்ளன. கோயம்புத்தூரில் பல தாபாக்கள் உள்ளன. மகாராசா வேர்ல்டுக்கு அருகில் ஒரு தாபாவும், சின்னவேடம்பட்டியில் உள்ள ரமணியின் மயூரிக்கு அருகில் ஒரு தாபாவும் இருந்தன. பெரும்பாலான மதுபானம் அருந்தகங்களில் ஒவ்வொன்றும் பத்து வாடிக்கையாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் தனித்தனி குடிசைகள் உள்ளன.
  • போர் சீசன்சு கரட்டுமேடுவில் மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை மட்டுமே இயங்கும். சைவ மற்றும் அசைவ உணவு மற்றும் பியரும் வழங்கப்படுகிறது; இவ்விடம் விருந்துகளுக்கு நல்லது. கேரள சிக்கன் குடல் இங்கு சிறப்பு.
  • பன் ரிபப்ளிக்கு - பீளமேடு, கிருட்டிணம்மாள் கல்லூரிக்கு அருகில். கோயம்புத்தூரின் முதல் மெக்டொனால்ட்சு உணவகம்.
  • அரி பவன் - ஆர்டிஓ சாலை & காந்திபுரம் 4 ஆவது தெரு & பீளமேடு, இங்கு அசைவ உணவு பரிமாறப்படுகிறது. மதிய உணவில் நான்கு வகையான அசைவக் குழம்புகள் கிடைக்கும். கரண்டி ஆம்லெட்டும் இதன் துணை உணவுகளும் இங்கு சிறப்பு. மதிய உணவிற்கு மட்டுமே இங்கு கிடைக்கும்.
  • புளூ பெர்ரி உணவு விடுதி - கோவைப்புதூர் வி.எல்.பி கலைக் கல்லூரி எதிரில் உள்ளது. காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். பிரியாணி (ஆடு, கோழி மற்றும் மீன்) சிறப்பு. பல்வேறு அசைவ கறிகளை வழங்குகிறது. விழா ஆணைகளை எடுத்து வீட்டு விநியோகங்களையும் வழங்குகிறது. செட்டிநாடு மற்றும் செங்குடு கோழிக்கறி ஆகியவை இங்கு தனிச்சிறப்பு வாய்ந்தவை.
  • முத்து ராவுத்தர் உணவு விடுதி - உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லக்கூடியத் தொலைவில் உள்ளது. காலை, பிற்பகல், மாலை. அசைவ உணவு உண்பவர்களுக்கு சிறந்த இடம். இங்குள்ள சிறந்த உணவுகள் மாட்டிறைச்சி பிரியாணி மற்றும் மாட்டிறைச்சி சுக்கா.
  • கே.எப்.சி - ஆர்.எசு. புரத்தில் உள்ளது.
  • பாட்டி அம்மா தோசை கடை ஜெம் மருத்துவமனை அருகில் உள்ளது. காந்தி பூங்காவில் உள்ள செந்தில் மருத்துவமனை வழியாக செல்ல வேண்டும். மாலை மற்றும் இரவில் மட்டுமே கடை இயங்கும். சோளம், கம்பு, தக்காளி, ராகி, காலிஃபிளவர், காளான், பேபிகார்ன், பனீர் தோசை மற்றும் சேவா போன்ற பல்வேறு வகையான தோசைகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. பட்டர் ஆப்பம் இங்கு தனிச்சிறப்பு.
  • சீசன்சு - ஆர்,எசு,புரத்தில் உள்ளது. மலிவான, ஆரோக்கியமான சைவ உணவுகளை வழங்குகிறது. சோளம் மற்றும் கீரை சாண்ட்விச்சு மற்றும் அனைத்து பழச்சாறுகளும் இங்கு சிறப்பு.
  • தி வில்லேச்சு - ஜெம் மருத்துவமனை அருகில் உள்ளது. காந்தி பூங்காவில் உள்ள செந்தில் மருத்துவமனை வழியாக செல்ல வேண்டும். மாலை மற்றும் இரவில் மட்டுமே இயங்கும். சோளம், கம்பு, தக்காளி, ராகி, காலிஃபிளவர், காளான், பேபிகார்ன், பனீர் தோசை மற்றும் சேவா போன்ற பல்வேறு வகையான தோசைகள் கிடைக்கும். முட்டை சப்பாத்தி இங்கு தனிச்சிறப்பு.

பானங்கள்

[edit | edit source]

மதுபானக் கடைகள் அல்லது பேரங்காடிகளில் மதுபானம் கிடைக்காது. மது விற்பனை தமிழ்நாடு மாநில அரசால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான அமைப்பான சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சில நட்சத்திர விடுதிகளில் மட்டும் கிடைக்கிறது. இந்தக் மதுக் கடைகள் வழக்கமாக இரவு 10:00 மணியளவில் மூடப்படும்.

கோயம்புத்தூரில் உள்ள சிறுவாணி ஆற்றின் தண்ணீர், மிகவும் சுவையான பதப்படுத்தப்படாத நீரில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

உறங்க

[edit | edit source]

சிக்கன விடுதிகள்

[edit | edit source]

தொடருந்து நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அருகில் நாளொன்றுக்கு ₹150-350 விலையில் ஒற்றை அறைகளைக் கொண்ட பல சிக்கனமான தங்கும் விடுதிகள் உள்ளன.

  • துனாக்கு சிபிரிங்சு சர்வீசு அபார்ட்மென்ட்சு 12/24 துனாக்கு சிபிரிங்சு, பத்மநாபா நகர், சிவில் ஏரோட்ரோம், சிட்ரா (கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து 200 மீ). கோயம்புத்தூர் நகரத்தில் மூன்று இடங்களில் (விமான நிலையம், நேரு நகர், ராமநாதபுரம்) 29 அலங்கார அடுக்குமாடி குடியிருப்புகள் தினசரி வாடகைக்கு, இணைய வசதியுடன் 25 இருக்கைகள், குளிரூட்டப்பட்ட மாநாட்டு மண்டபம் மற்றும் உடற்பயிற்சி கூட வசதியுடன் ₹125 முதல்
  • கெசுட்டுலைன்சு சர்வீசு அடுக்குமாடி குடியிருப்புகள் - சிவராம் நகர், சுங்கம் புறநகர் சாலை, கோயம்புத்தூர். இலவச இணைய வசதி மற்றும் உடற்பயிற்சிக்கூட வசதியுடன் கூடிய 15 முழுமையாக அலங்கரிக்கப்பட்ட அறைகள். கோயம்புத்தூர் தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.
  • சிட்டி டவர் உணவு விடுதி- 56 சிவசாமி சாலை, நிலையான குளிரூட்டப்பட்ட இரட்டை அறை ₹1250.

கனிமணி விடுதி 427, 100 அடி சாலை காந்திபுரம் கோயம்புத்தூர் (கற்பகம் வளாகத்திற்கு எதிரே), பேருந்து நிலையத்திற்கு அருகில், வெட்டு சாலையைக் கடக்க ஐந்து நிமிட நடைப்பயணம்.

  • கிசுகால் கிராண்டு - 245ஏ, டாக்டர் இராசேந்திரப் பிரசாத் சாலை, டாடாபாத், காந்திபுரம். காலை உணவு, இரவு உணவு அல்லது மதிய உணவு. 24 மணிநேர இணைய வசதி, இருவழி விமான நிலைய போக்குவரத்து.
  • இரயில் பயணிகள் ஓய்வு அறை, - இரயில் நிலையத்திற்குள்.

ஆடம்பர விடுதிகள்

[edit | edit source]
ஜென்னி கிளப்

கோயம்புத்தூரில் பல 4 மற்றும் 5 நட்சத்திர விடுதிகள் உள்ளன.

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

[edit | edit source]