Jump to content

Wy/ta/கொடைக்கானல்

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > கொடைக்கானல்
Wy/ta/கொடைக்கானல்

கொடைக்கானல் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் 7,200 அடியில் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் ஒரு மலைப்பிரதேசம் ஆகும். குறிஞ்சிச் செடிகள் இங்கு நிறைந்துள்ளன.

புரிதல்

[edit | edit source]
குறிஞ்சி மலர்

கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன. கொடைக்கானல் 'மலைவாசத்தலங்களின் இளவரசி' என்று அழைக்கப்படுகிறது. விவசாயமும் சுற்றுலாவும் அதன் உள்ளூர் பொருளாதாரத்தின் முக்கியப் பகுதிகளாகும்.

வான்வழி

[edit | edit source]

கொடைக்கானலுக்கு மிக அருகில் அமைந்துள்ள விமான நிலையங்கள் திருச்சிராப்பள்ளி (150 கி.மீ), மதுரை (120 கி.மீ) மற்றும் கோயம்புத்தூர் (175 கி.மீ) ஆகியவையாகும். மும்பை, திருச்சிராப்பள்ளி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களிலிருந்து கொடைக்கானலுக்குத் தொடர் விமானச் சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையங்களில் எதிலிருந்தும், தனியார் வாடகை வண்டி அமர்த்தியோ, அல்லது இரயில் மற்றும் பேருந்து மூலமாகவோ கொடைக்கானலை அடையலாம்.

இரயில் வழி

[edit | edit source]

மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையம் கோடை ரோடு இரயில் நிலையமாகும். இந்நிலையம் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. கோடை ரோடு இரயில் நிலையத்திலிருந்து, சாலை வழியாக மட்டுமே பயணிக்க முடியும். கொடைக்கானல் வரை செல்வதற்கு வாடகைக்கார்கள் கிடைக்கின்றன. ஆனால் இப்பகுதியில் இதுவே ஒரே போக்குவரத்து வழியாக இருக்கக்கூடும் என்பதால், அவற்றின் கட்டணங்களை பெரும்பாலும் பேரம் பேசி குறைக்க இயலாது.

கொடைக்கானலுக்கு மிக அருகில் அமைந்துள்ள மற்றொரு இரயில் நிலையம் 'திண்டுக்கல் இரயில் நிலையம்' ஆகும். திண்டுக்கல் ஒரு பெரிய நகரம் என்பதால், இந்த இரயில் நிலையத்தைப் பயன்படுத்தி கொடைக்கானலுக்கு வருவது மிகவும் எளிதானது. திண்டுக்கல் இரயில் நிலையத்தில் இறங்கியதும், அங்கிருந்து திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்குச் செல்ல நீங்கள் ஒரு மூன்று சக்கர வண்டியை அமர்த்திக்கொள்ளலாம். அங்கிருந்து வத்தலகுண்டுவிற்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன; வத்தலகுண்டுவிலிருந்து கெடைக்கானலுக்குச் செல்லவும் ஏராளமான பேருந்துகள் உள்ளன. திண்டுக்கல்லிலிருந்து கொடைக்கானலுக்கு நேரடியாகச் செல்லும் பேருந்துகளும் உள்ளன; இருப்பினும், அத்தகைய பேருந்துகளுக்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். பேருந்து மூலம் திண்டுக்கல்லிலிருந்து வத்தலகுண்டுவிற்குச் செல்ல சுமார் 30 நிமிடங்களும், அங்கிருந்து கொடைக்கானலுக்குச் செல்ல சுமார் 2 மணி நேரமும் ஆகும்.

சாலைவழி

[edit | edit source]

திண்டுக்கல் நகரத்திலிருந்து கொடைக்கானல் சுமார் 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது; மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொடைக்கானல் செல்லப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

சென்னை, புதுச்சேரி, திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், பழனி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மதுரையிலிருந்து (அரப்பாளையம்) கொடைக்கானலுக்குச் செல்ல, குறிப்பிட்ட இடைவெளிகளில் பேருந்துகள் கிடைக்கின்றன.

மூனாறிலிருந்து வருபவர்கள் தேனி மற்றும் வடமதுரை ஆகிய இடங்களில் பேருந்து மாற வேண்டியிருக்கும்

பார்க்க

[edit | edit source]
கொடை ஏரியில் படகு சவாரி
தூண் பாறை
  • பெரிஜம் ஏரி
  • கோக்கர் வாக்
  • பிரையன்டு பூங்கா
  • குறிஞ்சியாண்டவர் கோயில்
  • தூண் பாறை
  • குணா குகைகள்
  • டால்பின் மூக்கு
  • தொப்பித் தூக்கும் பாறைகள்
  • மதிகெட்டான் சோலை
  • வெள்ளி நீர்வீழ்ச்சி
  • கொடைக்கானல் ஏரி
  • 500 வருட மரம்
  • கால்ஃப் மைதானம்


குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்

செய்ய

[edit | edit source]
  • மிதிவண்டியில் ஏரியைச் சுற்றி வரலாம். அங்கேயே மிதிவண்டி வாடகைக்குக் கிடைக்கும்.

வாங்க

[edit | edit source]
  • வீட்டில் செய்யப்பட்ட சாக்கலெட்.
  • தைல எண்ணெய்.

எப்படிச்செல்வது

[edit | edit source]

தொடருந்து

[edit | edit source]

கொடைக்கானலுக்கு நேரடியாக தொடருந்து மூலம் செல்ல முடியாது. திண்டுக்கல், பழனி மற்றும் கொடைரோடு ஆகிய தொடருந்து நிலையங்களில் இருந்து பேருந்தின் மூலம் செல்லலாம்.

பேருந்து

[edit | edit source]
  • வத்தலகுண்டுவிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
  • பழனியிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அடுத்து செல்ல

[edit | edit source]

புவியியல் ஆள்கூறுகள்

[edit | edit source]

(10.2333°N, 77.4833°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இந்நகரம் அமையப் பெற்றுள்ளது.

இந்த வழிகாட்டி ஒரு கோட்டுச்சித்திரம். இதற்கு மேலும் உள்ளடக்கம் தேவை. இதில் வார்ப்புரு உள்ளது, ஆனால் போதிய தகவல் இல்லை. தயவு செய்து முன்னே வந்து இது வளர உதவும்!

wikivoyage:En:Kodaikanal