Jump to content

Wy/ta/காம்பியா

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > காம்பியா
Wy/ta/காம்பியா

Fishing boat, Gunjur

காம்பியா என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுள் ஒன்றாகும். இது மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் காம்பியா ஆற்றின் நெடுகிலும் அமைந்துள்ள காம்பியா ஒரு சிறிய, குறுகிய நாடாகும். இது கிட்டத்தட்ட முழுமையாக செனகல் நாட்டினால் சூழப்பட்டுள்ளது. கடற்கரைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு அப்பால், அலெக்சு ஏலியின் 'ரூட்சு' எனும் படைப்பின் மூலம் புகழ்பெற்ற 'சூஃபுரே' நகரத்திற்காகவும் காம்பியா அறியப்படுகிறது. இது 'புன்னகைக்கும் கடற்கரை' என்று அழைக்கப்படுகிறது. இதமான குளிர்கால வானிலைக்குப் பெயர் பெற்ற இந்நாட்டின் நிலப்பரப்பு, பசுமையான ஆற்றுச் சூழலையும் ஆன்மீகப் பண்பாட்டையும் கொண்டுள்ளது.

புரிதல்

[edit | edit source]

Page Template:Quickbar/styles.css has no content.

காம்பியா நாடு அடிப்படையில் காம்பியா ஆற்றின் வெள்ளச் சமவெளியையும், அதைச் சுற்றியுள்ள சில தாழ்வான குன்றுகளையும் கொண்டுள்ளது. இதன் மிக உயர்ந்த புள்ளி கடல் மட்டத்திலிருந்து வெறும் 53 மீட்டர் உயரத்தில் மட்டுமே உள்ளது. மேலும் இதன் அதிகபட்ச அகலம் 50 கிலோமீட்டருக்கும் குறைவாகவே உள்ளது.

காலநிலை

[edit | edit source]

வெப்பமண்டல காலநிலை, வெப்பமான, மழைக்காலம் (சூன் முதல் நவம்பர் வரை); குளிர்ந்த, வறண்ட காலம் (நவம்பர் முதல் மே வரை); இயற்கை இடர்பாடுகள்: வறட்சி (கடந்த 30 ஆண்டுகளில் மழைப்பொழிவு 30% குறைந்துள்ளது)

வரலாறு

[edit | edit source]

ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பு, காம்பியாவின் வரலாற்றில் பெரும்பகுதி வாய்மொழி மரபுகள் மூலமே பாதுகாக்கப்பட்டது. 'வாசு கல் வட்டங்கள்' ஆரம்பகாலக் குடியேற்றத்திற்கான சான்றுகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், அவற்றைப் பற்றி அதிகத் தகவல்கள் இல்லை. தற்போதைய காம்பியா பகுதி 14-ஆம் நூற்றாண்டில் மாலிப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது.

வரலாறு, கலாச்சாரம் மற்றும் மொழி ரீதியாக செனகலுடன் பிணைக்கப்பட்டிருந்த காம்பியா, 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சக்திகளால் அண்டை நாடான செனகலிலிருந்து பிரிக்கப்பட்டது. அப்பகுதியின் பெரும்பகுதி பிரான்சின் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், காம்பியா நதியைச் சுற்றியிருந்த ஒரு குறுகிய நிலப்பகுதி கிரேட் பிரிட்டனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சிறிய பகுதியே பிற்காலத்தில் 'காம்பியா' நாடாக உருவானது.

காம்பியா 1965ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று ஐக்கிய இராச்சியத்திடமிருந்து சுதந்திரம் பெற்றது. 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியன்று ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இது 1964ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் எழுதப்பட்டு, 1996ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 8ஆம் தேதியன்று நடைபெற்ற தேசிய வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. இது 1997ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

1982ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை, காம்பியா நாடானது செனகலுடன் இணைந்து 'செனகாம்பியா' எனும் குறுகிய காலக் கூட்டமைப்பை உருவாக்கியது. 1991-ஆம் ஆண்டில் இவ்விரு நாடுகளும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டன. 1994-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இராணுவப் புரட்சி ஒன்று அதிபரைப் பதவியிலிருந்து அகற்றி அரசியல் நடவடிக்கைகளுக்குத் தடை விதித்தது. இருப்பினும், 1996-ஆம் ஆண்டின் புதிய அரசியலமைப்பு மற்றும் அதிபர் தேர்தல், அதைத் தொடர்ந்து 1997-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றின் மூலம் குடிமை நிர்வாக ஆட்சி முறை மீண்டும் நடைமுறைக்கு வந்தது. அன்று முதல் தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தாலும், அரசாங்கத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைபிடிக்கப்படுதல் போன்ற காரணங்களால் அவை முழுமையான சனநாயகத் தன்மையுடன் அமைவதில்லை.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த இயக்யா ஜம்மே, அக்காலகட்டத்தில் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பு மற்றும் பன்னாட்டு நீதிமன்றம் போன்ற பன்னாட்டு அமைப்புகளிலிருந்து காம்பியாவை விலக்கிக்கொண்டார். இறுதியில் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அடாமா பாரோவிடம் அவர் தோல்வியடைந்தார். தோல்வியை ஒப்புக்கொள்ள ஜம்மே முதலில் மறுத்தபோதிலும், பாரோ செனகலுக்குச் சென்று தஞ்சம் புகுந்தார்; இறுதியில், அண்டை நாடுகளின் இராணுவத் தலையீட்டு அச்சுறுத்தலால் ஜம்மே பதவியிலிருந்து விலகி நாடு கடத்தப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து, ஜம்மேவின் சில வரம்புமீறிய நடவடிக்கைகளைச் சரிசெய்ய பாரோ முயன்று வருகிறார்; இதன் விளைவாக, காம்பியா மீண்டும் பன்னாட்டு நீதிமன்றம் மற்றும் காமன்வெல்த் அமைப்பில் இணைந்துள்ளது.

தேசிய விடுமுறைகள்

[edit | edit source]

காம்பியா தனது சுதந்திர தினத்தை பிப்ரவரி 18 அன்று கொண்டாடுகிறது. இந்தச் சிறிய நாடு 1965-ஆம் ஆன்டில் சுதந்திரம் பெற்றது. காம்பிய மக்கள் அனைவரும் கிட்டத்தட்ட கொண்டாடும் 'ஈத்' எனும் இசுலாமியப் பண்டிகையும் இங்கு முக்கியமானது; 2 முதல் 3 நாட்கள் வரை நடைபெறும் இப்பண்டிகையின்போது, ​​விருந்துக்கான உணவைத் தயாரிக்க 2,50,000 விலங்குகள் வரை பலியிடப்படுகின்றன. இக்காலகட்டத்தில் காம்பிய மக்கள், குறிப்பாகப் பெண்கள், தங்கள் மிகச் சிறந்த ஆடைகளை அணிவதோடு, 3,000 காம்பிய தலாசி (D3,000) வரை செலவிட்டுப் புதிய ஆடைகளையும் வாங்குகிறார்கள்.

மக்கள்

[edit | edit source]

காம்பியாவில் பல்வேறு இனக்குழுக்கள் வசிக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தங்கள் சொந்த மொழியையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வருகின்றன. மாண்டின்கா இனக்குழுவே மிகப்பெரியது. அதைத் தொடர்ந்து புலா , வோலோஃப் , இயோலா , செராகூலே , செரெர்சு மற்றும் பியானுங்காசு ஆகிய இனக்குழுக்கள் உள்ளன. உள்ளூரில் 'அகு' என்று அழைக்கப்படும் கிரியோ மக்கள், காம்பியாவின் மிகச்சிறிய இனச் சிறுபான்மையினரில் ஒரு பிரிவினராக உள்ளனர். இவர்கள் சியரா லியோன் கிரியோல் மக்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இவர்கள் பாரம்பரியமாகத் தலைநகரிலேயே அதிகம் வசித்து வருகின்றனர்.

நகரங்கள்

[edit | edit source]
  • பாஞ்சூல்: காம்பியா வின் தலைநகரமும்

பார்க்க

[edit | edit source]

சாப்பிட

[edit | edit source]

குடிக்க

[edit | edit source]

காம்பியாவின் பிரத்யேக பீர், ஜுல்ப்ரூ, முயற்சித்துப் பார்ப்பதற்கு மதிப்புள்ளது.

நித்திரை கொள்ள

[edit | edit source]

கற்க

[edit | edit source]

அடுத்து செல்ல

[edit | edit source]