Jump to content

Wy/ta/புதுச்சேரி

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > புதுச்சேரி
Wy/ta/புதுச்சேரி

புதுச்சேரி என்பது சென்னை மாநகரில் இருந்து 170 கி.மீ. தொலைவில், இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியாக வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். நகரத்தின் கட்டடக்கலையில், குறிப்பாக பழைய குடியிருப்புப் பகுதிகளில், மத்திய தரைக்கடல் பாணி வீடுகள் மற்றும் அடுமனைகள் வரிசையாக அமைந்துள்ள சாலைகளில், வலுவான பிரெஞ்சு செல்வாக்கு உள்ளது. இங்கு பிரெஞ்சு மொழி இன்னும் புரிந்து கொள்ளப்படுகிறது, மேலும் முழு நகரமும் கிழக்கு, மேற்கின் இனிமையான கலவையைக் கொண்டதாக உள்ளது.

அறிமுகம்

கடற்கரைச் சாலையில் பிரெஞ்சு நினைவுச்சின்னம்

புதுச்சேரி, புவியியல் ரீதியாக சிறிய பகுதியாக இருந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய பிரெஞ்சு குடியேற்றமாக இருந்தது. இந்த நகரம் வணிகம், போர் ஆகியவற்றின் நீண்ட கால, சுவாரசியமான வரலாற்றைக் கொண்டுள்ளது. இது கிழக்கின் பிரெஞ்சு ரிவியரா (லா கோட் டி அஸூர் டி எல்'எஸ்ட்) என்றும் அழைக்கப்படுகிறது. நீங்கள் தமிழ்நாட்டில் சிறிது காலம் கழித்திருந்து, புதுச்சேரியை தரைவழியாக அணுகியிருந்தால், பிரெஞ்சு கட்டிடக்கலை, நல்ல ஒயின் வழங்கும் உணவகங்களைக் காண்பதில் லேசான பண்பாட்டு அதிர்ச்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

மொழி

புதுச்சேரியில் பேசப்படும் முக்கிய மொழி தமிழ் ஆகும். இந்த நகரம் அடிப்படையில் பிரெஞ்சுக்காரர்களின் வசம் இருந்த தமிழ் பேசும் பகுதியாகும். நீங்கள் புதுச்சேரியில் வாழ விரும்பினால், தமிழ் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

ஆங்கிலம் பேசும் சுற்றுலாப் பயணியாக தெற்காசியாவில் பரவலாக பயணிக்க முடியும். பல்கலைக்கழகக் கல்வி பெற்ற புதுச்சேரிவாசிகளுடன் ஆங்கிலத்தில் உரையாட இயலும்.

பிரெஞ்சு இங்கு ஒரு அதிகாரப்பூர்வ மொழியாகவோ அல்லது புதுச்சேரியில் பரவலாகப் பேசப்படும் மொழியாகவோ இல்லை. மேலும் அதன் இடத்தை பெரும்பாலும் ஆங்கிலம் கைப்பற்றியுள்ளது. ஆனால் பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியின் போது வளர்க்கப்பட்ட உயர் வர்க்க முதியவர்களிடையே இன்னும் உரையாடப்படுகிறது. இருப்பினும், நகரத்தின் பிரெஞ்சு பாரம்பரியம் புதுச்சேரியின் வாழ்க்கையின் ஒரு அம்சமாகக் கருதப்படுகிறது, இது பல பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. தெலுங்கும், மலையாளமும் இங்கு அதிகாரப்பூர்வ மொழிகளாகும், ஆனால் அவற்றின் பயன்பாடு பொதுவாக குறிப்பிட்ட சமூகங்களிடம் மட்டுமே உள்ளது.

அணுகல்

புதுச்சேரி தனது பிரெஞ்சு பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த ஒளிப்படத்தில் பணியில் இருக்கும் உள்ளூர் போக்குவரத்து காவலர் காட்டப்பட்டுள்ளார்: குறிப்பு: கெபி, சார்லஸ் டி கோல் பாணி தொப்பி அணிந்துள்ளார்.

மகிழுந்தில்

புதுச்சேரி அனைத்து பக்கங்களிலிருந்தும் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் இதன் வடக்கே 160 கி.மீ தொலைவில் உள்ளது.

சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து (MAA IATA) ஒரு டாக்சியையும் வாடகைக்கு எடுக்கலாம். ஆகத்து 2018 நிலவரப்படி, இதற்கு சுமார் ரூ 2,500 செலவாகும்.

சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் சாலை (கிழக்கு கடற்கரை சாலை, சுருக்கமாக இ.சி.ஆர் என்று அழைக்கப்படுகிறது) ஒரு அழகிய நெடுஞ்சாலையாகும். இதில் சாதாரணமாக சுமார் 3 மணிநேரத்தில் புதுச்சேரியை அடையலாம். இருப்பினும், பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இ.சி.ஆர். ஐ முத்தமிடும் கடற்கரையைக் காணாமல் செல்ல முடியாது. மேலும் வழியில் பல இடங்களில் நின்று செல்லலாம். இந்தப் பாதை மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டினம், இடைக்காழிநாடு (ஆலம்பாறை அல்லது ஆலம்பர கோட்டை), படகு இல்லத்தைக் கொண்ட முதலியார்குப்பம், மரக்காணம் (உப்புபளங்களைக் கொண்டுள்ளது) மற்றும் கனகசெட்டிகுளம்/காலாப்பேட்டை வழியாக செல்கிறது.

சென்னையிலிருந்து புதுவைக்குச் செல்லும் மற்றொரு சாலை தேசிய நெடுஞ்சாலை 45 (தே.நெ.45) இது மாபெரும் தெற்கு வழித்தடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தப் பாதை தாம்பரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், திண்டிவனம் வழியாக செல்கிறது.

கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் நே.நெ. 45 ஆகியவை சுங்கச்சாவடிகள் வழியாகச் செல்லும் சாலைகள். சென்னையிலிருந்து புதுவைக்குப் பயணம் செய்ய இரு சாலைகளிலும் ஏறக்குறைய ஒரே நேரம் ஆகும்.

புதுச்சேரி பெங்களூரிலிருந்து சுமார் 320 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலை 7 (தே.நெ.-7) வழியாகச் சென்று, பிரதான நெடுஞ்சாலையிலிருந்து இடதுபுறம் (சாலைக் குறியீடுகள் பாதையைக் குறிக்கின்றன) எடுத்து, பின்னர் புதுச்சேரிக்கு தேசிய நெடுஞ்சாலை 66 (தே.நெ.-66) இல் செல்லவும். இந்தப் பாதை ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, செஞ்சி, திண்டிவனம் வழியாக செல்கிறது. நீங்கள் திண்டிவனம் (செஞ்சி வழியாக) அல்லது விழுப்புரம் (திருக்கோவிலூர் வழியாக) வழியாக புதுச்சேரியை அடையலாம். செஞ்சிக் கோட்டையும் திண்டிவனம் செல்லும் வழியில் உள்ளது. இது இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தால் (ASI) பாதுகாக்கப்படுகிறது. மொத்த பயண நேரம் சுமார் 5-6 மணி நேரம் ஆகும். வழியில் நல்ல உணவகங்கள் இல்லாததால், பயணத்தின்போது தேவையான அளவு உணவு அல்லது சிற்றுண்டிகளை எடுத்துச் செல்லுங்கள்.

பேருந்தில்

பல்வேறு நகரங்களிலிருந்து புதுச்சேரிக்கு பல பேருந்துகள் உள்ளன. புதுச்சேரிக்கு செல்வதற்கு சென்னையிலிருந்து பேருந்து மூலம் 3½ மணி நேரத்தில் செல்லலாம். கோயம்பேடு, திருவான்மியூர் அல்லது கிண்டியில் உள்ள சென்னை பேருந்து முனையங்களிலிருந்து (CMBT) பேருந்தில் ஏறலாம். சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு செல்வதற்கான மலிவான வழி, திருவான்மியூரில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) பேருந்தில் செல்வதுதான். CMBT-யிலிருந்து பேருந்து சேவையைப் பொறுத்து சுமார் ₹150 கட்டணம். புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம்) குளிரூட்டப்பட்ட பேருந்துகளை இயக்குகிறது. கட்டணம் ₹280 ஆகும். கிழக்கு கடற்கரை சாலை பேருந்து உங்களை பாண்டிச்சேரியில் உள்ள மறைமலை அடிகள் சாலையில் உள்ள பிரதான பேருந்து முனையத்தில் இறக்கிவிடும். பேருந்து நிலையத்திற்கு வெளியே இருந்து தானிகள் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நகரங்களும் பாண்டிச்சேரியுடன் மலிவான அரசுப் பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறிய நகரங்களிலும், கிராமங்களில் நின்று செல்லும். இந்த பேருந்துகள் நிச்சயமாக புதுச்சேரி பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும்.

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து தனியார் பேருந்துகள் புதுச்சேரிக்குச் செல்கின்றன. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை வழியாக செல்லும் பேருந்துகள் அவ்வப்போது பயணிக்கின்றன. மேலும் வழக்கமான நகர்ப்புற-நகர-பேருந்து முதல் அரை-படுக்கை மற்றும் முழு-படுக்கை வசதியுள்ள பேருந்துகள் வரை பல்வேறு வகையான பேருந்து வகைகள் இயக்கப்படுகின்றன. மும்பை மற்றும் இந்தியாவின் பிற நகரங்களுக்கும் நீண்ட தூர பேருந்துகள் உள்ளன. ரெட்பஸ் வலைத்தளத்திலிருந்து எந்த பேருந்துகள் கிடைக்கின்றன என்பதைக் கண்டறிய முடியும்.

தொடருந்தில்

புதுச்சேரி விழுப்புரம் வழியாக உள்ள மின்சார தொடருந்து பாதை மூலம் புதுச்சேரி சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் மற்றும் திருப்பதிக்கு தினமும் இரண்டு பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் புவனேசுவரத்துக்கு வாராந்திர விரைவு இரயில் சேவையும் உள்ளது. இது தவிர, சென்னை எழும்பூருக்கு தினசரி விரைவு இரயிலும் இயக்கப்படுகிறது. கேரளம் வழியாக மங்களூருக்கும், தில்லி, பெங்களூர், மும்பைக்கு இயக்கப்படும் வாராந்திர இரயில்களும் பாண்டிச்சேரியை இணைக்கின்றன.

வானுர்தி வழியாக

புதுச்சேரி வானூர்தி நிலையம் (PNY IATA, பாண்டிச்சேரி வானூர்தி நிலையம்) டோர்னியர்ஸ் மற்றும் செஸ்னாஸ் போன்ற சிறிய வானூர்திகள் தரையிறங்குவதற்கான வசதிகளுடன் கூடிய வானூர்தி நிலையம் புதுச்சேரியில் உள்ளது. ஸ்பைஸ்ஜெட் ஐதராபாத்திலிருந்து (பிற முக்கிய இந்திய நகரங்களிலிருந்து இணைப்புகளுடன்) தினசரி விமானங்களை இயக்குகிறது. பெங்களூரிலிருந்து விமானங்களும் தினசரி இயக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் இருந்து வாடகை மகிழுந்தில் நகர மையத்திற்கு செல்ல ₹350 கட்டணம் வசூலிக்கின்றனர். விமான நிலையத்திலிருந்து நகர மையத்திற்கு 30 நிமிட நேரத்தில் தானியில் செல்லலாம். விமான நிலைய வளாகத்திற்குள் இருந்து நகர மையத்திற்கு ஒரு தானியை எடுத்துச் செல்வதற்கான கட்டணம் ஏப்ரல் 2013 நிலவரப்படி சுமார் ₹150 ஆகும். நீங்கள் வானூர்தி நிலைய வளாகத்திற்கு வெளியே நடந்து சென்று ஒரு தானியை கைகாட்டி நிறுத்தி, சிறந்த கட்டணத்துக்காக நீங்கள் பேரம் பேசலாம் நடத்தலாம்.

சென்னை வானூர்தி நிலையம் அருகிலுள்ள பன்னாட்டு விமான நிலையமாகும், இது புதுச்சேரியிலிருந்து சுமார் 135 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை வானூர்தி நிலையம் இந்தியாவின் முக்கிய நகரங்களுடனும், வெளிநாடுகளுடனும் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து புதுச்சேரிக்கு ஒரு வழி மகிழுந்து பயணத்துக்கு தோராயமாக ₹1,500 ஆகும். பயண நேரம் சுமார் 3 மணி நேரம் ஆகும்.

சுற்றிவர பார்க்க

மிதிவண்டி அல்லது இருசக்கர தானூர்தி மூலம்

மேற்கு ஐரோப்பாவை நினைவூட்டும் வகையில் குறுகிய தெருக்கள் புதுச்சேரியில் உள்ளன. மகிழுந்தில் சுற்றிச் செல்ல முயற்சிக்காமல், மிதிவண்டி அல்லது இருசக்கர தானூர்தி போன்ற இரு சக்கர வாகனத்தை வாங்குவது அல்லது வாடகைக்கு எடுப்பது மிகவும் நல்லது. இருப்பினும், சிறிய தெருக்களில் கணிசமான எண்ணிக்கையிலான பாதசாரிகள் இருப்பதால், புதுச்சேரியில் சீராக சவாரி செய்வது கடினமாக இருக்கலாம். அதே நேரத்தில் சாலைகளை மகிழுந்துகள், சரக்குந்துகள் பயன்படுத்த வாய்ப்புள்ளது. நகரத்தில் பாதசாரிகளுக்கு சரியான பாதை உள்ளது.

மிஷன் தெரு மற்றும் எம். ஜி சாலையில் பல வாடகை வண்டிக் கடைகள் உள்ளன. 2016 சனவரி நிலவரப்படி, கியர் இல்லாத ஸ்கூட்டருக்கு ஒரு நாளைக்கு ₹300, கியர் உள்ள மோட்டார் சைக்கிளுக்கு ₹500, மிதிவண்டிக்கு ₹40-50 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில வாடகை சேவை கடைகளில் மட்டுமே நீங்கள் சில அடையாள ஆவணங்களை பிணையமாகவும், ₹500 முன்பணமாகவும் வழங்க வேண்டும். மீதமுள்ளவை ஆவணங்களோ அல்லது முன்பணமோ இல்லாமல் வாகனங்களை வழங்குகின்றன. வாடகைக்கு எடுப்பதற்கு முன் மிதிவண்டியை முழுமையாகச் சரிபார்க்கவும். வழக்கமாக, இந்த வாகனங்களுக்கான வாடகை நாட்களின் எண்ணிக்கையில் அதாவது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கணக்கிடப்படுகிறது. மிஷன் தெருவில் உள்ள இரண்டு இரு சக்கர வாகன வடகைக் வாடகை கடைகளில் மோட்டார் சைக்கிள்கள் எளிதாகக் கிடைக்கும்.

பேருந்து அல்லது தானி மூலம்

புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (PTDC) சுற்றுலாப் பயணிகளுக்காக தினசரி பேருந்துகளை இயக்குகிறது. இதில் புதுச்சேரியில் காணக்கூடிய அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களையும் காட்டுவதாக உள்ளது. இது புதுச்சேரியைச் சுற்றிப் பார்க்க மிகவும் சிக்கனமான நல்ல வழியாகும்.

தூரத்தைப் பொறுத்து ஒரு ஒரு பயணத்துக்கு ₹5-20 இக்கு சவாரி செய்யக்கூடிய பேருந்துகள் மற்றும் பகிர் தானிக்களின் வலையமைப்பு குறைவாகவே உள்ளது.

பார்க்க

ஆயி மண்டபம், பாரதி பூங்கா
கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை
அரவிந்தர் ஆசிரமம்
  • பாரதி பூங்கா பூங்காவின் மையத்தில் ஒரு வெண்ணிற நினைவுச்சின்னமான ஆயி மண்டபம் எள்ளது. இது மூன்றாம் நெப்போலியன் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த நினைவுச்சின்னமானது அவரது ஆட்சிக்காலத்தின் போது பிரெஞ்சு நகரத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டதை நினைவூகூர்வதாக உள்ளது. அதற்கு ஒரு தாசியான ஆயி என்பவளின் பெயரிடப்பட்டது. நகரத்திற்கு தண்ணீர் வழங்குவதற்காக அமைக்கபட்ட நீர் நீர்த்தேக்கத்தை உருவாக்க அவள் தனது சொந்த வீட்டை அழித்த தியாகத்தை நினைவு கூர்வதாக உள்ளது.
  • சுண்ணாம்பாறு படகு இல்லம் - (இங்கு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களில் கூட்டமாக இருக்கும்) நகரின் 10 கி.மீ தெற்கே கடலூர் செல்லும் வழியில் உள்ளது. இது உள்ளூர் பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இங்கிருந்து பாரடைஸ் கடற்கரைக்கு ஒரு விசைப் படகு எடுத்துச் செல்லலாம்.
  • பிரெஞ்சு போர் நினைவுச் சின்னம் (காந்தி சிலைக்கு எதிரே) இது முதல் உலகப் போரின்போது நாட்டிற்காக இறந்த பிரெஞ்சு இந்தியர்களுக்காக கட்டபட்ட ஒரு போர் நினைவுச் சின்னமாகும். இதில் முதல் உலகப் போரின்போது இறந்த வீரர்களின் பெயர்களை வெண்கல தகட்டில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது இறந்த வீரர்களின் பெயர்கள், இந்தோசீனாவில் பிரெஞ்சு போர் மற்றும் அல்ஜீரியப் போர் ஆகியவற்றில் ஈடுபட்டு இறந்தவர்களின் பெயர்களையும் கொண்ட தகடுகளும் சேர்க்கப்பட்டன. நினைவுச்சின்னம் பிரான்சின் சொத்தாகவே உள்ளது.
  • காந்தி சிலை கட்கரைச் சாலை
  • கலங்கரை விளக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆட்சியாளர்களால் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் இந்திய அரசால் ஒரு புதிய கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது.
  • புதுச்சேரி தாவரவியல் பூங்கா (கிழக்கில் நுழைவு), ☏ +91 413 233 9497. இது ஒரு நல்ல பூங்கா, கொஞ்சம் சீர்குலைந்திருந்தாலும். மீன்வள இயக்குநரகத்தால் பராமரிக்கப்படும் ஒரு மீன்காட்சிசாலை உள்ளது. நுழைவுக் கட்டணம் கிடையாது.
  • புதுச்சேரி அருங்காட்சியகம் சோழ காலத்திய வெண்கலச் சிலைக்களைக் கொண்ட ஒரு கலை மற்றும் வரலாற்று அருங்காட்சியகம்.
  • போர்த்துகீசிய ஆளுநரின் மாளிகை
  • புதுச்சேரி அறிவியல் மையம் (ம) கோளரங்கம் இங்கு பார்வையாளர்கள் மற்றும் மாணவர் குழுக்களுக்கு நேரடியாக அறிவியல் குறித்து விள்ளக்கமாக செய்து காட்டப்படுகிறது. குழந்தைகள் பிரிவில் குழந்தைகளுக்கு எளிய சோதனைகளை வழங்குகிறது.
  • ஊசுடேரி இங்கு படகு சேவை உள்ளது.
  • பாரதியார் நினைவு இல்லம்
  • புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் - மணலால் பிள்ளையார் செய்து வழிபட்டு வந்த தலம்.
  • அரவிந்தர் ஆசிரமம் - அரவிந்தர் மற்றும் அன்னையின் சமாதி


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 7 சின்னங்களின் தொகுப்பு
அ. எண்நினைவு சின்னத்தின் பெயர்அமைவிடம்மாவட்டம்புவியியல் குறியீடு
1மூலநாதசுவாமி திருக்கோவில்பாகூர்புதுச்சேரி11°48′25″N 79°44′32″E
2திருகுண்டாங்குழி மகாதேவர் திருக்கோவில்மதகடிப்பட்டுபுதுச்சேரி11°55′01″N

79°38′11″E

3வரதராஜ பெருமாள் திருக்கோவில்திருவண்டார்கொவில்புதுச்சேரி11°55′08″N

79°39′26″E

4பஞ்சநாதஈஸ்வரர் திருக்கோவில்திருபுவனைபுதுச்சேரி11°55′39″N

79°38′51″E

5அரிக்கமேடுஅரியாங்குப்பம்புதுச்சேரி11°53′52″N

79°49′01″E

6ஏகாம்பரஈஸ்வரர் திருக்கோவில்சேத்தூர்காரைக்கால்
7சுயம்புநாதசுவாமி திருக்கோவில் (தான்தோன்றீஸ்வரர் கோயில்)நெடுங்காடுகாரைக்கால்10°58′03″N

79°46′16″E