Wy/ta/பிரான்ஸ்
பிரான்ஸ் என்பது ஐரோப்பாக் கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுள் ஒன்றாகும். இது மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. பிரான்சு என்பது ஏறக்குறைய ஒவ்வொரு பயணியும் ஒருவித பிணைப்பைக் கொண்டிருக்கும் ஒரு நாடாகும். எண்ணற்ற தேநீர் விடுதிகள், எழில்மிகு கிராமங்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற உணவு வகைகளில் வெளிப்படும் அதன் வாழ்க்கை மீதான பேரானந்தத்தைக் கண்டு பலர் கனவு காண்கிறார்கள். சிலர் பிரான்சின் மாபெரும் தத்துவஞானிகள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவோ, அல்லது அது உலகிற்கு அளித்த அழகிய மொழியில் மூழ்கித் திளைக்கவோ வருகிறார்கள். இன்னும் சிலர், அதன் நீண்ட கடற்கரைகள், பிரம்மாண்டமான மலைத்தொடர்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் பண்ணை நிலக் காட்சிகளுடன் கூடிய நாட்டின் புவியியல் பன்முகத்தன்மையால் ஈர்க்கப்படுகிறார்கள். காதல் காற்றில் நடனமாடும் மற்றும் ஒவ்வொரு மூலையிலும் இனிய கிசுகிசுப்புகள் ஒலிக்கும், மயக்கும் காதல் நகரமான பாரிசின் தாயகமாக பிரான்சு திகழ்கிறது.
பிரான்சு பல ஆண்டுகளாக உலகின் அதிகம் பார்வையிடப்படும் நாடாக இருந்து வருகிறது. 2024- ஆம் ஆண்டில் இந்நாடு 10 கோடி பார்வையாளர்களைப் பெற்றது. இந்த மக்கள் அனைவரும் பல காரணங்களுக்காக பிரான்சுக்கு வருகிறார்கள்: அதன் நகரங்களில் கண்டத்தின் சில சிறந்த பொக்கிசங்கள் உள்ளன. அதன் கிராமப்புறங்கள் செழிப்பாகவும் நன்கு பராமரிக்கப்பட்டும் உள்ளன. மேலும் ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான டிசுனிலேண்டு பாரிசு உட்பட பல முக்கிய சுற்றுலா இடங்கள் இங்குள்ளன. பிரான்சு நாடு ஐரோப்பாவின் புவியியல் ரீதியாக மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த நாடுகளில் ஒன்றாகும். நகர நாகரிகம் மிக்க பாரிசு, சூரிய ஒளிமிக்க பிரெஞ்சு ரிவியரா, காற்று வீசும் அட்லாண்டிக் கடற்கரைகள், பிரெஞ்சு ஆல்ப்சின் பனிபடர்ந்த ஓய்விடங்கள், லோயர் பள்ளத்தாக்கின் மறுமலர்ச்சிக் கால அரண்மனைகள், கரடுமுரடான செல்டிக் பிரிட்டனி மற்றும் வரலாற்றாசிரியர்களின் கனவான நார்மண்டி என ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட பகுதிகளும் இங்குள்ளன.
ஆழ்ந்த உணர்வுகள், கொந்தளிப்பான அரசியல், பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் அறிவொளிக் காலத்தின் பொக்கிசங்கள் ஆகியவற்றிற்கு இந்நாடு பெயர் பெற்றது.
மண்டலங்கள்
[edit | edit source]பிரெஞ்சு குடியரசு முக்கியமாக ஐரோப்பாவில் அமைந்திருந்தாலும், உலகம் முழுவதும் பரவியுள்ள பல பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் "மெட்ரோபாலிட்டன் பிரான்சு" என்பது ஐரோப்பிய நிலப்பரப்பில் உள்ள 12 நிர்வாகப் பிராந்தியங்கள் மற்றும் கோர்சிகா தீவு ஆகியவற்றை—அதாவது ஐரோப்பாவிற்குள் உள்ள அனைத்து பிரெஞ்சுப் பகுதிகளையும்—குறிக்கிறது. இவை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிற கண்டங்களில் உள்ள அந்நாட்டின் கடல்கடந்த பிரதேசங்களிலிருந்து வேறுபட்டவை. நிர்வாகப் பிரிவுகளின் அடுத்த நிலையில் 96 'துறை'கள் உள்ளன. இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு துறைகள் ஆறுகளின் பெயர்களைக் கொண்டுள்ளன. மற்றவற்றில் பெரும்பாலானவை மலை அல்லது கடல் போன்ற பிற இயற்கை அம்சங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன.
நகரங்கள்
[edit | edit source]பார்க்க
[edit | edit source]சாப்பிட
[edit | edit source]குடிக்க
[edit | edit source]பிரான்ஸ் கண்டுபிடித்தார் மது, மற்றும் பிரான்ஸ் முழுவதும் பல வகையான மது களைக் காணலாம்.
அடுத்து செல்ல
[edit | edit source]