Jump to content

Wy/ta/பின்லாந்து

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > பின்லாந்து
Wy/ta/பின்லாந்து

பின்லாந்து என்பது ஐரோப்பாக் கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுள் ஒன்றாகும். இது வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. பின்லாந்து என்பது, வசதியான சிறிய நகரங்கள் மற்றும் மாநகரங்கள் ஆங்காங்கே காணப்படும், மாசுபடாத பரந்த இயற்கை நிலப்பரப்புகளைக் கொண்ட ஒரு நாடாகும். பல பனிக்காலங்களில் பனிப் படலங்களால் தட்டையாக்கப்பட்டதால், பின்லாந்தில் அதன் நோர்டிக் அண்டை நாடுகளைப் போன்ற பிரம்மாண்டமான மலைகள் இல்லை. ஆனால், 188,000 ஏரிகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான தீவுகள் காணப்படுகின்றன. பின்லாந்து ஆர்க்டிக் பகுதி வரை நீண்டுள்ளது. அங்கு வட துருவ ஒளி மற்றும் நள்ளிரவு சூரியனைக் காணலாம். புராணங்களில் கூறப்படும் கோர்வதுண்டுரி மலை, சாண்டா கிளாசின் இல்லம் என்று சொல்லப்படுகிறது. மேலும் உரோவானிமியில் ஒரு சாண்டாலேண்ட்டு உள்ளது.

பின்லாந்து ஓர் உயர் தொழில்நுட்ப நாடாக இருந்தாலும், பின்லாந்து மக்கள் வெப்பமான மாதங்களில் தங்கள் கோடைகாலக் குடில்களுக்குச் சென்று, குறுகிய ஆனால் பிரகாசமான கோடைக்காலத்தில் நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் பார்பிக்யூ போன்ற அனைத்து விதமான ஓய்வு தரும் பொழுதுபோக்குகளையும் அனுபவிக்க விரும்புகிறார்கள். பின்லாந்து, இசுக்காண்டிநேவியா மற்றும் உருசியா ஆகிய இரண்டிலிருந்தும் அதை வேறுபடுத்தும் ஒரு தனித்துவமான மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. பின்லாந்து கலாச்சாரம் பழமையானதாக இருந்தாலும், உருசியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, 1917-ஆம் ஆண்டில்தான் அந்நாடு சுதந்திரம் பெற்றது.

நகரங்கள்

[edit | edit source]

பார்க்க

[edit | edit source]
  • டூர்க்கூ: மிகப் பழமையான நகரம் பின்லாந்து

சாப்பிட

[edit | edit source]

குடிக்க

[edit | edit source]

அடுத்து செல்ல

[edit | edit source]