Wy/ta/பஞ்சாப்
பஞ்சாப் நகரம் இந்தியத் துணைக்கண்டத்தின் முக்கியமான ஒரு நகரமாகும். வடக்கிந்தியாவில் அமைந்துள்ள இந்நகரமானது பொருண்மையான மக்கட்செறிவும் கலாச்சாரச்செறிவும் கொண்டுள்ளது. பஞ்சாப் என்ற சொல்லுக்கு பாரசீக மொழியில் "ஐந்து நதிகளின் நகரம்" என்று பொருள்படும். இம்மாநிலத்தில் ஓடும் அவ்வைந்து நதிகளானவை ஜீலம், செனாப், ராவி, சட்லஜ் மற்றும் பீஸ். இந்த நதிகள் யாவும் இண்டஸ் நதியின் கிளை நதிகளாகும். இந்த இண்டஸ் நதியானது தென்முனைப்பகுதி முழுவதும் ஓடி பஞ்சாப் மற்றும் கைபர் பக்துங்க்வா பகுதிகளுக்கிடையில் எல்லையை வகுக்கிறது.
தட்டையான நில அமைப்பும், மிகச்சிறந்த நீர்வளமும் கொண்டிருப்பதால், பஞ்சாப் இந்தியத்துணைக்கண்டத்தின் மிகவும் செறிவுள்ள பகுதியாக அறியப்படுகிறது. 1840-களில் நடந்த ஆங்கிலேய-சீக்கிய போர்களுக்குப்பின் இம்மாநிலம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆளுகைக்குக்கீழ் வந்தது. அதன் முன்னர் முகலாயப்பேரரசின் கீழும், பின்னர் சீக்கியப்பேரரசின் மையமாகவும் இருந்தது.
1947-ல் பிரித்தானிய இந்தியா இரண்டு சுதந்திர நாடுகளாகப் பிரிந்தது. அவை முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகும். இவ்விரண்டு நாடுகளும் பஞ்சாப் மாகாணத்தை இரு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டன. இன்றும் பஞ்சாப் என்ற பெயர் கொண்ட மாநிலங்களை இந்த இரண்டு நாடுகளிலும் காணலாம்.