Jump to content

Wy/ta/கோழிக்கோடு

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > கோழிக்கோடு
Wy/ta/கோழிக்கோடு

Mananchira

கோழிக்கோடு என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் இரண்டாவது பெரிய மாநகரமாகும்.

கோழிக்கோடு கடற்கரை

புரிதல்

[edit | edit source]

கோழிக்கோடு ஆங்கிலேயர்களால் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக மாற்றப்படும் வரை கோழிக்கோடு சாமுத்திரி மன்னர்களின் தலைநகராக இருந்தது. கள்ளிக்கோட்டை (காலிகட்) என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் கடல்சார் பட்டுச் சாலையில் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்தது. அரேபியா, பாரசீகம், பின்னர் ஐரோப்பாவிலிருந்து இங்கு வணிகர்கள் அடிக்கடி வந்தனர். பருத்தி துணியைக் குறிப்பிடபயன்படும் காலிகோ என்ற ஆங்கிலச் சொல் இந்த நகரத்தின் பழைய பெயரிலிருந்து வந்தது.

பல நூற்றாண்டுகள் பழமையான தெருக்களின் வசீகரத்துடனும், காற்றில் உள்ளூர் இனிமையான வாசனையுடனும் கோழிக்கோடு ஒரு காதல் இடமாக இருந்தது. இன்று, கோழிக்கோடு உயர் தொழில்நுட்ப வணிக வளாகங்கள் மற்றும் நவீன உணவு விடுதிகள் (கஃபேக்கள்) கொண்ட வளர்ந்த நகரமாகும். இந்த நகரம் வணிகம் மற்றும் வர்த்தகத்தின் மையமாக உள்ளது.

கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, இந்திய மேலாண்மை நிறுவனம், தேசிய தொழில்நுட்ப நிறுவனம், நீல்ட் உள்ளிட்ட பல முக்கியமான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.

கோழிக்கோடு நாட்டுப்புற கலைகளில் ஒரு செழிப்பான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. திரையாட்டம் என்பது கோழிக்கோடு மாவட்டத்தின் மிகச்சிறந்த இன நிகழ்ச்சிக் கலைகளில் ஒன்றாகும். இந்தச் சடங்கு ஆண்டு கொண்டாட்டம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தின் கோயில் காடுகள் மற்றும் நாட்டார் கோயில்களின் முற்றங்களில் நடத்தப்படுகிறது. சனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் திரையாட்ட ஆண்டு விழா நடக்கின்றது.

திரையாட்டம் - நாட்டார் நடனங்களின் தாய்

எப்படி செல்வது

[edit | edit source]

வானூர்தியில்

[edit | edit source]
கிருஷ்ண மேனன் அருங்காட்சியகம்
களரி தற்காப்புக் கலை
  • கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் (CCJ IATA) (கரிப்பூர் வானூர்தி நிலையம், காலிகட் விமான நிலையம்). கட்டிடத்திற்கு வெளியே பரோடா வங்கியின் தானியங்கிப் பணப்பொறி உள்ளது. உங்களிடம் இந்திய செல்பேசி எண் இருந்தால் மற்றும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்ட ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிடினால் மட்டுமே இலவச வைஃபை கிடைக்கும். வானூர்தி நிலையத்திற்குள் சிம் அட்டைகள் விற்கப்படுவதில்லை. கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தால் நகர மையத்திற்கு நேரடி பேருந்து வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் வானூர்தி நிலையத்தில் உள்ள பல ஊழியர்கள் அதை மறுத்தனர். நீங்கள் ஒரு தானி, டாக்ஸி அல்லது உள்ளூர் பேருந்தில் 2வது விமான நிலைய சந்திப்புக்கு சென்று, அங்கிருந்து நகர மையத்திற்கு உள்ளூர் பேருந்தில் செல்லலாம்.

மாற்று பன்னாட்டு விமான நிலையம் கண்ணூரில் (CNN IATA), 93 கி.மீ. உள்ளது.

தொடருந்தில்

[edit | edit source]

மும்பை, தில்லி, சென்னை, பெங்களூர், திருவனந்தபுரத்தில் இருந்து நேரடி தொடருந்துகள் உள்ளன. ரயில்வே விசாரணைகளுக்கு, இந்திய இரயில்வேயில் கால அட்டவணைகள், கட்டணங்கள் மற்றும் பிற விவரங்களைக் காணலாம்.

பேருந்தில்

[edit | edit source]

தென்னிந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

சொந்த வண்டியில்

[edit | edit source]

சாலை எப்போதும் பரபரப்பாக இருப்பதாலும், போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுவதாலும் வாகனம் ஓட்டுவது சோர்வு தருவதாக இருக்கும். இயற்கையான சூழலுடன் கூடிய கடற்கரை சாலையைத் தவறவிடாதீர்கள். பெங்களூர் சாலை இரவு நேரங்களில் மூடப்படும்.

போக்குவரத்து வசதி

[edit | edit source]

பேருந்தில்

[edit | edit source]
  • பேருந்துகள் 5 கி.மீ.க்கு ₹8.00 கட்டணம் வசூலிக்கின்றன. நகரப் பேருந்துகள் இங்கு பச்சை நிறத்தில் உள்ளன, அவை மிகவும் சரியான நேரத்தில் செல்பவையாகவும் மலிவானவையாகவும் உள்ளன. அனைத்து நகரப் பேருந்துகளும் மானாஞ்சிரா குளம் பகுதியில் புறப்பட்டு அங்கேயே முடிவடைகின்றன. பவங்கட், எலத்தூர், நடக்காவு பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் மானாஞ்சிராவின் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் அருகிலிருந்து புறப்படுகின்றன. மருத்துவக் கல்லூரி மற்றும் மாவூர் சாலைக்குச் செல்லும் பேருந்துகள் மானாஞ்சிராவின் வருமான வரி அலுவலகத்தின் பக்கத்தில் நிற்கின்றன. ஃபெரோக், கல்லாய், பேப்பூர் செல்லும் பேருந்துகள் மானாஞ்சிராவின் பெண்கள் பள்ளிக்கு அருகில் நிற்கின்றன.
  • கடற்கரைப் பகுதிக்கு பேருந்துகள் மிகவும் குறைவாகவே உள்ளன. நீங்கள் 2 கி.மீ தூரம் நடந்து செல்ல வேண்டும் அல்லது தானியில் செல்ல வேண்டும்.
  • தனியார் பேருந்துகள் மாவூர் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து (1 கி.மீ) புறப்படுகின்றன. அருகிலுள்ள கிராமங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகள் பாளையத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து (1 கி.மீ) புறப்படுகின்றன.
  • மாவூர் சாலையில் உள்ள 5வது கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்துகள் புறப்படுகின்றன. இந்த நவீன பேருந்து நிலையம் பயணிகளுக்கான வசதிகளைக் கொண்டுள்ளது. 270 கார்கள் நிறுத்தும் வசதி உள்ளது. அருகிலுள்ள பகுதிகளுக்கு மெதுவாக நகரும், தாழ்தள, குளிரூட்டப்பட்ட பேருந்துகள் உள்ளன. நகரத்திற்குள் பயணிக்க இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்தலாம்.

பேருந்து எண்கள்

[edit | edit source]

பச்சை நிற நகர பேருந்துகளுக்கான பேருந்து எண்கள்:

  • பட் சாலை கடற்கரை. 110B
  • சாலியம் கடற்பகுதி. 215
  • செருவந்தா ஆறு.121

கடலுண்டி ஜெட்டி. 210K

  • கலிபோய்கா படகு குழாம். 113
  • கப்பாடு கடற்கரை. 9
  • கரட் நதி. 223
  • கருவன் துருத்தி ஆறு. 213
  • கோழிக்கோடு நகரம். கே.0
  • மாலிக்கடவு ஆறு. 12
  • மாம்புழா பாலம். 231P
  • மணக்கடவு ஆறு. 246
  • மனஞ்சிரா சதுக்கம். K1
  • முக்கத்து ஜெட்டி. 211K
  • ஓடும்ப்ரா ஜெட்டி. 242
  • பையனக்கல் கடற்கரை. 239
  • புதியப்பா கடற்கரை. 105
  • தாமரச்சேரி மலை. 8

தானியில்

[edit | edit source]

வழக்கமாக கி.மீ.க்கு ₹30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டாக்சியில்

[edit | edit source]

டாக்சிகள், ☏ +91 495 2306023. குளிர்சாதன வசதி கொண்ட டாக்சிகள் ஒரு நாளைக்கு ₹1,000க்குக் கிடைக்கின்றன. தொடருந்து நிலையம் அல்லது மானாஞ்சிரா பகுதியில் அவற்றைத் தேடுங்கள்.

ஆண்டு முழுவதும் வானிலை வெப்பமாகவும், ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதால், குளிரூட்டப்பட்ட வாகனம் இங்கு மிகவும் வசதியானது. உபர் மற்றும் ஓலா போன்ற கால் டாக்சிகளும் கிடைக்கின்றன.

மகிழுந்தில்

[edit | edit source]

ஓட்டுநர்கள் அல்லது நீங்களே ஓட்டிச் செல்லும் வசதியுடன் கூடிய கார்களை வழங்கும் பல வாடகை நிறுவனங்கள் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. போக்குவரத்து அதிகமாகவும், மெதுவாகவும் இருப்பதால் கல்லாய் சாலை மற்றும் வயநாடு சாலையை தவிர்த்திடுங்கள்.

நடந்து செல்ல

[edit | edit source]

நகரத்தில் நடைபாதைகள் அதிகம் இல்லை, இருப்பினும் சாலையின் ஓரத்தில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் நடந்து செல்லாம். தொடருந்து நிலையத்திற்கு வடக்கே நடைபாதையுடன் கூடிய பாலம் உள்ளது. தொடருந்து நிலையத்திற்கு தெற்கே நடைபாதைகள் இல்லாத பாலம் உள்ளது. பேப்பூரில் இருந்து கோதி பாலம் வரையிலான நீண்ட கடற்கரை சாலை நடந்து செல்ல ஒரு அமைதியான பகுதி.

பார்க்க

[edit | edit source]
கிருஷ்ண மேனன் அருங்காட்சியகம்
கோழிக்கோடு, மனஞ்சிரா குளத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம்.
  • கலைக்கூடம் (Art Gallery) (1 கி.மீ.). டவுன் ஹால் அருகில்.
  • சி.வி.என் களரி, தற்காப்புக் கலைகள் மற்றும் மர்ம சிகிச்சைக்கான பாரம்பரிய களரிப்பயற்று நிறுவனம், 1945 ஆம் ஆண்டு முதல் கோழிக்கோடின், நடைக்காவில், சிகிச்சை மற்றும் நிகழ்த்துதல் செய்யப்படுகிறது.
  • எலத்தூர், கழிமுகத்துடன் கூடிய அழகிய ஆற்றங்கரை கிராமம் (12 கி.மீ). எலத்தூர் அருகே உள்ள எடக்கரையில் சதுப்பு நிலத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு கோயில்காடு வல்லிக்கட்டு காவு ஆகும். இங்கு குரங்குகள், மயில்கள், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள், காட்டுக் கோழிகள், பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள், பல வகையான ஆர்க்கிட் பூக்களைக் காணலாம். பட்டாம்பூச்சி வடிவத்தில் இலைகளைக் கொண்ட ஒரு வகை மூலிகைச் செடி இங்கே உள்ளது.
  • காப்பாடு கடற்கரை (17 கி.மீ). இந்த கடற்கரை டேனிஷ் நீலக் கொடி அமைப்பால் இந்தியாவின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. வாஸ்கோடகாமா 1498 இல் ஐரோப்பாவிலிருந்து இங்கு வந்தார். அதன் நினைவாக ஒரு பூங்காவும், ஒரு நினைவுத் தூணும் உள்ளது. திறந்தவெளி குளியல் வசதிகள் உள்ளன, மேலும் காட்சி கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. உலாவும் நடை பாதை சிறந்த முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கடலேப் பார்த்து உள்ள ஒரு மலையின் மீது உள்ள ஒரு பழங்கால கோயில் இங்குள்ள மற்றொரு ஈர்ப்பாகும்.
  • கீர்தாட்ஸ் அருங்காட்சியகம், சேவரம்பலம். அரசால் பராமரிக்கப்படும் பழங்குடி ஆராய்ச்சி நிலையம்.
  • கோழிக்கோடு கடற்கரை (2 கி.மீ). மீன் காட்சியகம், முற்றவெளி, வானொலி நிலையங்கள், மீன்பிடி கிராமங்கள், பழங்கால மிஷ்கல் பள்ளிவாசல், கடல் உணவு உணவகங்கள், லயன்ஸ் குழந்தைகள் பூங்கா.
  • கிருஷ்ண மேனன் அருங்காட்சியகம் (ம) கலைக்கூடம், கிழக்கு மலை (4 கி.மீ). திங்கட்கிழமைகளில் மூடப்படும். இந்திய வரலாற்றைக் அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற இடம்.
  • மானாஞ்சிறா குளம் மற்றும் தோட்டங்கள் (இரயில் நிலையத்திற்கு அருகில்). பல அழகான சிலைகளைக் கொண்ட ஒரு பரந்த பூங்கா. நுழைவுக் கட்டணம் இல்லை ஆனால் மதியம் 2 மணிக்குப் பிறகுதான் வாயில் திறந்திருக்கும். பூங்காவிற்கு அருகில் காமன்வெல்த் நிறுவனம் போன்ற பல வரலாற்று கட்டிடங்கள் உள்ளன. பூங்காவின் தெற்குப் பகுதியில் 'பட்டால பள்ளி' என்று அழைக்கப்படும் வட்ட வடிவ பள்ளிவாசல் உள்ளது. பூங்காவின் தெற்குப் பகுதியில் நெரிசலான 'மிட்டாய் தெரு' அங்காடித் தெருவுக்குள் நீங்கள் நடந்து செல்லலாம். டவுன் ஹால், கலைக்கூடம், கிரவுன் தியேட்டர் ஆகியவை குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ளன. பாசல் எவாஞ்சலிகல் மிஷன் மற்றும் பெண்கள் பள்ளி ஆகியவை பூங்காவின் கிழக்குப் பகுதியில் உள்ளன. பூங்காவில் 250 காலனித்துவ கால பாணி விளக்குகள், ஒரு செயற்கை நீரோடை, ஒரு இசை நீரூற்று, ஒரு இசை மேடை, ஒரு திறந்தவெளி அரங்கம் போன்றவை உள்ளன. பூங்காவிற்கு அருகிலுள்ள பொது நூலகத்தில் மலையாளம், ஆங்கில புத்தகங்களின் ஒரு பெரிய சேகரிப்பு உள்ளது.
  • பழசிராஜா அருங்காட்சியகம் திங்கட்கிழமைகளில் மூடப்படும். பெருங்கற்கால நினைவுச்சின்னங்களின் மாதிரிகள் உள்ளன.
  • கோளரங்கம் (Planetorium) (பிராந்திய அறிவியல் மையம்) (1 கி.மீ). புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஜாஃபர் கான் காலனி சாலையில் உள்ளது. அருகிலுள்ள நகரங்களிலிருந்து பள்ளி மாணவர்களின் பேருந்துகள் வரும்போது காலை நேரங்களில் மட்டுமே வழக்கமாக காணக் கிடைக்கும்.
  • சரோவரம் உயிரியல் பூங்கா - தம்பதிகளுக்கு மட்டும், பேபி மருத்துவமனைக்கு அருகில் (2 கி.மீ). 7 சதுப்புநில இனங்கள், 29 சதுப்புநிலம் சம்மந்தபட்ட தாவரங்களும் விலங்குகளும், மற்றும் முதலுயிரி முதல் நீர்நாய் வரையிலான விலங்கினங்கள். இது 20 வகையான நீர்வாழ் பறவைகளுக்கு ஏற்ற ஒரு வாழ்விடமாகும். கால்வாய் நடைபாதைகள், படகு வசதிகள், நீர்நாய் பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா ஆகியவற்றைக் கொண்ட இந்த பகுதி 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. வெளிப்புறப் பகுதி அழகாக ஓடுகளாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது கல்லூரி ஜோடிகளின் பிரபலமான சந்திப்பு இடமாகும். உள் பகுதி நடைபாதைகளுடன் கூடிய வளர்ச்சியடையாத சதுப்புநிலக் காடு. வெளிப்புற ஓடுகள் வேயப்பட்ட பகுதிக்கு நுழைவுச் சீட்டு ₹10 மற்றும் உள் வனப் பகுதிக்கு கூடுதலாக ₹10.

கோயில்கள்

[edit | edit source]
மிஷ்கல் பள்ளிவாசல், குட்டிச்சிரா
சுப்பிரமணியர் கோயில், தளி
  • கோதேஸ்வரம் கடற்கரை கோயில், மாரட் கடற்கரை (4 கிமீ). நீங்கள் அருகிலுள்ள கடற்கரை கிராமங்களான சக்கும் கடவு, கய்யாடி தோடு, பையனக்கல், கய்யாடித்தோடு, நடுவட்டம், மேற்கு மாஹி, தம்பி சாலை, ஜான்சி கிராமங்களையும் பார்வையிடலாம்.
  • ஜெயின் தேராசர். இதன் வளாகத்திற்குள் இரண்டு கோயில்கள் உள்ளன, அவற்றில் ஒன்று 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. 1000 தூண்களைக் கொண்டுள்ளது.
  • கிழக்கு முறிக்குன்னு பகவதி அம்மன் கோயில் வி. கே. கிருஷ்ண மேனன் சாலை, கல்லாய் (5 கி.மீ). இந்தக் கோயில் ஒரு அழகிய குன்றின் மீது, ஒரு அழகிய குளம், பச்சை புல்வெளிகள் கொண்ட இடத்தில் உள்ளது.
  • மிஷ்கல் பள்ளிவாசல், குட்டிச்சிரா (2 கி.மீ). 600 ஆண்டுகள் பழமையான அமைப்பு. பல பழைய கட்டிடங்களால் சூழப்பட்ட அழகான குளம். குளத்தின் மறுபக்கத்திலிருந்து பார்க்கும்போது பள்ளிவாசல் மிகவும் பளபளப்பாக இருக்கும். இந்த நான்கு நிலை பள்ளிவாசல் பெரும்பாலும் மரத்தால் கட்டப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் குபோலாக்கள் அல்லது மினாரெட்டுகள் இல்லை, இது ஒரு இந்து கோவில் போல் தெரிகிறது. ஒருவேளை, கேரளத்தின் கோயில் கட்டிடக்கலை இங்கு உள்ள பழைய பள்ளிவாசல்களின் கட்டிடக்கலையை பாதித்தது. முஸ்லிம் அல்லாதவர்கள் மசூதிக்குள் நுழைய சிறப்பு அனுமதி தேவைப்படும்.
  • நரகத் பகவதி கோவில், கேரள கௌமுதி நாளிதழ் அருகில், தொண்டையாடு (3 கி.மீ.). நகரின் நடுவில் உள்ள ஒரு அமைதியான இடம்.
  • நொச்சிபிரா பகவதி கோயில் பீப்பிள்ஸ் சாலை, மேற்கு மலையில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் அலுவலகம் அருகே, கிட்டத்தட்ட 950 ஆண்டுகள் பழமையான புவனேஸ்வரி தேவி குடும்பக் கோயிலுடன்.
  • சிவன் கோயில், திருவண்ணூர் (3 கி.மீ). இந்தப் பழமையான, அழகான சிவன் கோயில். இதன் கருவறை யானைக்கோயில் வடிவத்தில் உள்ளது. இது சோழர் காலத் தூண்கள், பஞ்சாரங்கள் மற்றும் வயலிமுகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மையக் கோயில் எந்த பழுதோ அல்லது மாற்றத்திற்கோ உள்ளாகாமல் ஒப்பீட்டளவில் நன்கு பாதுகாக்கப்படுகிறது.
  • கண்டேஸ்வரம் கோயில், புதிய பேருந்து நிலையம் எதிரில் (1 கி.மீ.)
  • தளி கோயில், பாளையம் (1 கி.மீ). 14 ஆம் நூற்றாண்டின் அழகிய கோயில், மிகப் பெரிய குளத்தைக் கொண்டுள்ளது. கோயில் சுவர்கள் யானை வடிவத்தில் உள்ளன.
  • திருக்கைப்பேட்டை சுப்பிரமணியர் கோவில், பொன்னென்கோட்டு குன்னு (சைபர் பார்க் எதிரில், பாலாழி). 1,400 ஆண்டுகள் பழமையான கோவில். இப்போது புதுப்பிக்கப்படுகிறது.

செய்ய

[edit | edit source]
  • நகர நடைபயணம் ஒன்று (4 கி.மீ). பாத்திமா மருத்துவமனையிலிருந்து தொடங்கி, மருத்துவமனைக்கு எதிரே உள்ள குறுகிய பாதையில் செல்லவும். கேரள அரசு சாரா தொண்டு நிறுவன சங்கம், லட்சுமி அச்சகம், ஒயிஸ்கா இளைஞர் மையத்தைக் கடந்து நடந்து செல்லவும். சதுப்பு நிலத்தில் உள்ள சிறு பாலத்தைக் கடந்து, வலதுபுறம் திரும்பி, காட்டுக் கோயில், ஹஜ் ஹவுஸ், சன்னி ஹவுஸ் ஆகியவற்றைத் தாண்டி நடந்து, மீண்டும் சில்லி மலபார் உணவகத்திற்கு வலதுபுறம் திரும்பி, மீண்டும் வலதுபுறம் திரும்பி புதிய பேருந்து நிலையத்தை அடையலாம்.
  • நகர நடைபயணம் இரண்டு (குறைந்த போக்குவரத்துடன் 6 கி.மீ பாதை). பேருந்து நிலையத்திலிருந்து தொடங்குங்கள். அதற்கு எதிரே உள்ள சாலையில் சென்று, மர்கஸ் பள்ளிவாசல் மற்றும் சமஸ்தா மையத்தைக் கடந்து நடந்து செல்லுங்கள். மோர் சூப்பர் மார்க்கெட், கோளரங்கம், அறிவியல் மையத்தை நோக்கி வலதுபுறம் திரும்புங்கள். நீங்கள் செரூட்டி நகருக்குள் நுழைகிறீர்கள், அங்கு சாலையோரக் கடையில் ஒரு நல்ல காபி குடிக்கலாம். பகவதி கோயில், முத்தப்பன் காடு, பாலன் கே நாயர் சாலை, இந்திய விலங்கியல் ஆய்வு மையத்திற்கு நேராக நடந்து செல்லுங்கள். பிரம்மகுமாரிகள் தியான மையம் மற்றும் ஊசி அக்குபஞ்சர் மருத்துவமனை ஆகியவை உங்களை ஸ்பைனெல்லி பள்ளி மற்றும் மீட்பர் கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்கின்றன. நீங்கள் செயிண்ட் வின்சென்ட் காலனியில் உள்ள அக்ஸா ஜுமா மசூதியை அடைந்து, புதிய பேருந்து நிலையத்திற்குத் திரும்பி நடந்து செல்லுங்கள்.
  • மலை ஏற்றம் கோவிந்தபுரம், மான்காவு (7 கி.மீ) அருகே ஒரு மலை ஏறலாம். மானஞ்சிரா குளத்திலிருந்து கோவிந்தபுரத்திற்கு பேருந்தில் செல்லுங்கள். மலையில் ஏறி சென்ட்ரல் பள்ளிக்குச் செல்லுங்கள். முழு நகரத்தையும் அரபிக் கடலையும் நன்றாகக் காணலாம். காட்சிகள் அருமையாக இருக்கின்றன, ஆனால் பள்ளி மாணவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு வருவதில்லை. மான்காவு சந்திப்பிலிருந்து ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வயதானவர்களும் இங்கு செல்லலாம்.
  • பசுமை நடை இரிங்காடன் பள்ளி (4 கி.மீ நடைப்பயணம்) வழியாக பசுமை நடை. மருத்துவக் கல்லூரி வழியில் கோவூருக்கு ஒரு பேருந்தில் செல்லுங்கள். இரிங்காடன் பள்ளி சாலையில் இறங்குங்கள். நகரத்தின் நான்கு முக்கிய சாலைகளுக்கு இடையில் இருக்கும் கண்கவர் விசாலமான நெல் வயல்களுக்கு இடையில் நடந்து செல்லுங்கள். மைசூர் சாலையில் பூலக்கடவு சந்திப்பு வரை நீங்கள் நடந்து செல்லலாம். நெல் வயல்கள் வழியாகச் செல்லும் இந்த சிறிய சாலையை அமைதியைக் கெடுக்கும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெருவாக மாற்ற உள்ளூர்வாசிகள் ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் 2017 ஆம் ஆண்டுக்குள் வேலையைத் தொடங்கவிருந்தனர். இந்த இடத்தில் மட்டுமே நகரத்தின் சிறந்த மாட்டிறைச்சி கறியை ₹40க்கு மட்டுமே பெற முடியும். இது பெயர் பலகை இல்லாவிட்டாலும் ஒரு சிறிய உணவகத்தில் கிடைக்கிறது. இது ஜேடிடி, வெள்ளிமடுகுன்னு அருகே பூலக்கடவு சந்திப்பில் உள்ள கோயாஸ் சைக்கிள் மார்ட் மற்றும் பிரபாகர மருந்தகத்திற்கு அருகில் உள்ளது. (மதியம் 1-9 மணி). இரவு உணவிற்குப் பிறகு, நீங்கள் பூலக்கடவு ஆற்றுப் பாதையில் நடந்து செல்லலாம், அழகான நடைபாதையில் ஆற்றைக் கடந்து பரம்பில் பஜார் கிராமத்தை அடையலாம், அங்கிருந்து நகரத்திற்கு நேரடி பேருந்துகள் கிடைக்கும்.
  • வடக்கு கடற்கரை நடைப்பயணம் (5 கி.மீ). நலம் கேட்டில் தொடங்கி, இரயில்வே கேட்டைக் கடந்தவுடன் சாலை மூன்றாகப் பிரிகிறது. மூன்றாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து, காஃபி காபி டே மற்றும் கேட்வே ஓட்டலைக் கடந்து நடந்து செல்லுங்கள். மேயர் குடியிருப்பு மற்றும் மொய்து அருங்காட்சியகம் இந்த வழியில் உள்ளன. வெள்ளாயில் சாலையில் நுழைந்து கடற்கரைக்குச் செல்லுங்கள். மிகக் குறுகிய கடல் பாலமும், வெள்ளாயில் மீன்பிடித் துறைமுகமும் உள்ளது. கடற்கரையை அடைந்ததும், வலதுபுறம் திரும்பினால், வெள்ளாயில் காவல் நிலையம், சாந்தி நகர், ரேடியோ மாங்கோ, புதியப்பா, வெங்கலி, எலத்தூர் மற்றும் பவங்கட் வழியாகச் செல்வீர்கள். பவங்கட்டில் நகரத்திற்குத் திரும்ப குளிர்சாதனப் பேருந்துகள் உள்ளன.
  • பூங்கா நடைபயணம், மானாஞ்சிரா பூங்கா (1 கி.மீ). சுத்தமான குளத்தைச் சுற்றி நன்கு பராமரிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட தோட்டம். ஓய்வெடுக்க மிகப் பெரிய புல்வெளி. மதியம் 2 மணிக்குப் பிறகு மட்டுமே திறக்கப்படும். மிகவும் நெரிசலான இடம்.
  • பொது நூலகம் மற்றும் கஃபே (மானஞ்சிரா பூங்கா எதிரில்). பொது நூலகம், ஒலி நூலகம், குழந்தைகள் நூலகம், பன்னாட்டு பண்பாட்டு மையம் மற்றும் இலவச காபி.
  • திரைப் படம் பாரக்க, கிரவுன் திரையரங்கம் (1 கி.மீ), ☏ +91 4952721896. இரயில் நிலையத்திற்கு அருகில் 80 ஆண்டுகள் பழமையான திரையரங்கம். உள்ளே இரண்டு குளிரூட்டப்பட்ட திரைகள் மற்றும் ஒரு சிறிய சிற்றுண்டி பார் உள்ளன.
  • தெற்கு கடற்கரை நடைப்பயணம் (8 கி.மீ). கோழிக்கோடு கடற்கரையில் உள்ள அனைத்திந்திய ரேடியோவிலிருந்து தொடங்கி, முகமதலி கடற்கரைக்கு தெற்கே செல்லுங்கள். நீங்கள் ஒரு அழகான நடைபாதை வழியாக நடந்து பத்து நிமிடங்களுக்குள் பிரான்சிஸ் சாலை சந்திப்பை அடையலாம். கண்ணன் பரம்பில் கல்லறை, கண்ணன் பரம்பில் மசூதி, நைனன் வலப்பில் கடற்கரை மற்றும் இறுதியாக புதிய கோதி பாலம் ஆகியவற்றைக் கடந்து கடற்கரை சாலையில் தொடர்ந்து நடந்து செல்லுங்கள். பாலத்தைக் கடக்கும்போது, ​​சக்குக் கடவு கிராமத்தை அடைவீர்கள். பையனக்கல் கடற்கரைக்குச் செல்லுங்கள். இறுதியாக, பிரதான சாலைக்குத் திரும்ப பன்னியங்கரா காவல் நிலையத்தைக் கேளுங்கள். பச்சை நிற பேருந்துகளில் ஒன்றில் ஏறி திரும்பி வாருங்கள், அவை அனைத்தும் உங்களை மானஞ்சிரா குளம் சந்திக்கு அழைத்துச் செல்லும்.
  • வலியங்கடி நடைபயணம் (3 கி.மீ) சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அரேபியர்களும் ஐரோப்பியர்களும் தோள்களைத் தொட்டுப் பார்த்த வலியங்கடியின் பண்டைய கடற்கரைச் சந்தையில் ஒரு நடைப்பயணத்தை அனுபவிக்கவும். இன்றும் கூட, இந்த பண்டைய சந்தையில் வணிகர்களில் இந்துக்கள், முஸ்லிம்கள், சமணர்கள், குஜராத்திகள், மார்வாடிகள், தமிழர்கள் அடங்குவர். உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இந்த சந்தையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை, ஏனெனில் அவர்கள் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அறியாதவர்கள். இரயில் நிலையத்தின் பின்புறத்திலிருந்து தொடங்கி வலியங்கடிக்கு நேரடியாக நுழையுங்கள். வலியங்கடி கடற்கரையில் முடிவடைந்து, குஜராத்தி தெருவுக்கு இடதுபுறம் திரும்பினால், குட்டிச்சிரா குளத்திற்கு அருகிலுள்ள 600 ஆண்டுகள் பழமையான மிஷ்கல் மசூதியைக் காணலாம், அங்கிருந்து மேலும் 1 கி.மீ. தொலைவில் இது உள்ளது.
  • களரி தற்காப்புக் கலைகளைப் பாருங்கள், சி. வி. என். களரி சங்கம் (3 கி.மீ). சிறப்பு செயல் விளக்கங்களை ஏற்பாடு செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
  • யோகா மற்றும் தியானம், இன்னர் ஹார்மனி ஓஷோ தியான மையம், ☏ +91 9447871791. மிஸ்டிக் பள்ளி, மூர்த் கிராமம், மாலிக்கடவு, கோழிக்கோடு. சுவாமி அருள்ஜி நடத்துகிறார்.

வாங்க

[edit | edit source]

கோழிக்கோட்டில் மிகப்பெரிய வணிக வளாகங்கள் ஹைலைட் மால், லுலு மால் ஆகியவை ஆகும். நகர மையத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய வணிக வளாகங்கள் கோகுலம் கேலரியா, ஃபோகஸ் மால், ஆர்பி மால் ஆகியவை ஆகும். தி ஸ்பேஸ் மால் குளிரூட்டப்பட்டது அல்ல; இது சில்லறை விற்பனைக்கானதல்ல, மாறாக மொத்த விற்பனைக்கு மட்டுமே உரியது.

நகரத்திலேயே மிகப்பெரிய மளிகைக் கடை 'லுலு' ஆகும். நகர மையத்தில் உள்ள மிகப்பெரிய மளிகைக் கடை 'நெஸ்டோ' ஆகும். தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பரந்த கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மளிகைக் கடை ஜாம்ஜூம் ஹைப்பர் மார்க்கெட் ஆகும்.

வணிக வளாகங்கள்

[edit | edit source]
  • ஹை-லைட் மால், பலழி — 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது (1.4 மில்லியன் சதுர அடி பரப்பளவு). இங்கு 200 வணிகமுத்திரைக் கடைகள், 32 நகரும் படிக்கட்டுகள் (escalators), 18 மின்தூக்கிகள் (elevators), 8 திரையரங்குகள், ஒரு விளையாட்டு மண்டலம், ஒரு உணவுக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன. வணிக வாளத்துக்குச் செல்லுமையில் பல மணிநேரம் நீடிக்கக்கூடிய கடும் போக்குவரத்து நெரிசல்களு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது; இவை உங்களை மாலின் சுற்றுப்பகுதியிலேயே சிக்கிக்கொள்ளச் செய்யலாம்.
  • ஃபோகஸ் மால் (Focus Mall), புதிய தனியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே (1 கி.மீ.), ☏ +91 495 3017811. உயர்தர நகைகள், ஆடைகள், அணிகலன்கள் போன்றவற்றிற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட, 2,50,000 சதுர அடி பரப்பளவில் விரிந்துள்ள பிரம்மாண்டமான கட்டடம் இது. ஃபோகஸ் மாலில் அமைந்துள்ள உணவுக்கூடம் (Food Court), ஒரு தோசை உணவகம், கிரில் ஹவுஸ், 'விம்பிஸ்' (Wimpys), சாண்ட்விச் கார்னர், 'பீஸ்ஸா ரிக்கோட்டா', காபி கேலரி, 'சாட் ஜோன்' மற்றும் பலவகை உணவு வகைகளை வழங்கும் உணவகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • ஆர். பி. மால், புதிய தனியார் பேருந்து நிலையத்திற்கு எதிரே (1 கி.மீ.), ☏ +91 495-4015804. நான்கு திரையரங்குகள் மற்றும் ஆடை, நகைகள், மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் பல கடைகளைக் கொண்ட, ஆறு தளங்களையுடைய குளிரூட்டப்பட்ட வணிக வளாகம்.

நினைவுப் பொருட்கள்

[edit | edit source]

கைரளி ஹேண்ட்கிராப்ட், எம்.எம். அலி சாலை (1 கி.மீ.). யானைகள், படகுகள், கேரள நடனக் கலைஞர்களின் மரச் சிற்பங்கள், மாதிரிகள்.

உண்ண

[edit | edit source]

சாலையோர உணவுகள்

[edit | edit source]

குறைந்த செலவுக்கு

[edit | edit source]

டார்மர் தங்கும் விடுதிச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதியில் நிறைய தெரு உணவுகள் உள்ளன.

  • இரவுத் தட்டுகடை (எம்.எம் அலி சாலை மற்றும் கோழிக்கோடு சாலை சந்திப்பு). இங்கு மாலை நேரங்களில், உங்கள் கண் முன்னாலேயே சமைக்கப்படும் தெருவோர உணவுகள் கிடைக்கின்றன.
  • அலி பாய் தட்டுகடை (Ali Bhai Thattukada), தெற்கு கடற்கரை (பாம் பீச் குடியிருப்புகளுக்கு அருகில்). கடுக்க நீராசத்து, பிடி கோழி நிரச்சது, பரணி சிக்கன், பொரித்த ஐஸ்கிரீம் ஆகியவை இந்த இடத்தில் நீங்கள் உண்ண முயற்சிக்கக்கூடிய சில முக்கிய உணவுகள்.
  • அம்மா ரெஸ்டாரண்ட் (Amma Restaurant), புதியரா (எஸ்.கே. பொட்டக்காடு சாலையில், முதல் பாலத்திற்குச் சற்று அப்பால் உள்ள ஒரு குறுகிய கிளைச்சாலையில் அமைந்துள்ளது). திங்கள் முதல் சனி வரை, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கும். மதிய உணவோடு பரிமாறப்படும் காரசாரமான மீன் வறுவலுக்கு இது மிகவும் புகழ்பெற்றது.
  • அசோகா தேநீர் கடை (Ashoka Tea Shop), ரண்டம் கேட். மாலை நேரச் சிறப்பு உணவான உப்புமா மற்றும் அப்பளத்திற்காக, உணவுப் பிரியர்களிடையே மிகவும் விருப்பமான ஓர் இடம்.
  • பெஸ்ட் பீப் இன் தி சிட்டி (Best beef in the city) பூலக்கடவு சந்திப்பில் (ஜே.டி.டி, வெள்ளியமடுக்குன்று அருகே; நகரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில்) உள்ள 'கோயாஸ் சைக்கிள் மார்ட்' மற்றும் 'பிரபாகரா பார்மசி' ஆகியவற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. மாலை 1 மணி முதல் இரவு 9 மணி வரை கிடைக்கும். பெயர்ப்பலகை ஏதுமில்லாத ஒரு சிறிய உணவகத்தில் இது விற்கப்படுகிறது.
  • காபி ஹவுஸ் கல்லாய் சாலை, ஆராதனா லாட்ஜ் (1 கிமீ), ☏ +91 495 2302819.
  • ஃபலாஃபெல் கிங் உணவகம் (Falafel King Restaurant), குட்டிக்காட்டூர் அல்லது கொடுவள்ளி. எகிப்திய காய்கறி சிற்றுண்டிகளுக்கு.
  • போகஸ் மால் உணவு அரங்கம் (Focus Mall Food Court) புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே. சிற்றுண்டிகள் மற்றும் துரித உணவுகளுக்கு.
  • மேஜர் உணவகம் (Major Restaurant), ஜாஃபர்கான் காலனி சாலை (மார்கஸ் வளாகத்திற்கு அருகில்). தினமும், காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை. மாட்டிறைச்சி பிரியாணி.
  • மருத்துவக் கல்லூரி காபி இல்லம் (Medical College Coffee House) சிறந்த சூழல். போதுமான வாகன நிறுத்துமிட வசதி.
  • பியூர் சவுத் வெஜிடேரியன் (Pure South Vegetarian) குழந்தைகள் மருத்துவமனைக்கு எதிரில். மசாலா தோசைக்கு — ₹40. இவர்கள் கேரள பாணியிலான சைவ மதிய உணவையும் ₹130-க்கு வழங்குகிறார்கள்.
  • ரஹ்மத் ஹோட்டல் (1. மாத்ருபூமி அருகில் 2. ஸ்டேடியம் அருகில்). பிரியாணி, மீன் மற்றும் சைவ உணவுகள்.
  • சரவணா ஹோட்டல் வெஜிடேரியன், ராஜாஜி சாலை, ☏ +91 4952720621.
  • திருப்தி உணவகம் (Thripthi Restaurant) தேவகிரி கட்டிடத்தின் பின்புறம், மருத்துவக் கல்லூரி சந்திப்பு. வாகன நிறுத்துமிட வசதியுடன் கூடிய, ரம்மியமான ஒரு தனித்துவமான உணவகம்.
  • எடேல் ஹோட்டல், மிஷ்கல் மசூதிக்கு அருகில், குட்டிச்சிரா, ☏ +91 97466 03380. காலை 5 மணி முதல். எழுபது வருட பழமையான உணவகம். தின்பண்டங்கள், புட்டு, உப்புமா, துண்டு துண்தாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சி மற்றும் போண்டாக்களுக்கு பிரபலமானது.
  • சாம்பியன் உணவகம், குட்டிச்சிரா. வெள்ளையப்பம், பத்திரி, மாட்டுக்கறி, மீன் வறுவல்.
  • ரிஜின்ஸ் தரவாடு பிரியாணி மையம் (Rijins Tharavadu Biriyani Centre) மஸ்ஜித் சஹாபா அருகில், நீதிமன்றத்திற்கு பின்புறம்). மிகவும் நல்ல மாட்டிறைச்சி பிரியாணி.
  • மம்மாலிஸ் உணவகம் (Mammalis Restaurant), கோவூர். நல்ல மாட்டுக்கறி பிரியாணி.

நடுத்தர செலவுக்கு

[edit | edit source]
  • அலகாபுரி உணவகம் (Alakapuri Restaurant), முகமது அலி சாலை. பாரம்பரியக் கேரள மதிய உணவிற்கு.
  • பாம்பே உணவகம், சில்க் தெரு, மனஞ்சிரா, ☏ +91 4952366730. மசால் பிரியாணிக்கு.
  • காபி டே (Cafe Coffee Day), நலம் கேட். காபி மற்றும் சிற்றுண்டிகளுக்கு ஏற்ற, உயர்தரமான ஓர் இடம். இங்குள்ள சூழல் மிகவும் நிம்மதியானது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஒரு சந்திப்பு இடமாகும். ஒரு காபி மற்றும் பஞ்சாபி சமோசாவின் விலை ₹59.
  • சிக்கிங் ஃப்ரைடு சிக்கன், மருத்துவக் கல்லூரி சாலை (கல்யாண் சில்க்ஸ் எதிரில்)
  • சில்லி மலபார் (Chilli Malabar) கோவனூர், ☏ +91 9645619007. வாகன நிறுத்துமிட வசதி உண்டு.
  • சங்கி சிக்கன், ஃபெடரல் டவர்ஸ் எதிரில், ☏ +91 4954011555.
  • கோகோநட் உணவகம், ஓட்டல் ஹைசன், மாவூர் சாலை சந்திப்பு, ☏ +91 4952766726. சிறந்த சூழல், நேர்த்தியாக அமைக்கப்பட்ட மேசைகள். கோழிக்கோடு பாணி சைவ மதிய உணவு. ₹160.00.
  • டாமினோஸ், மாவூர் சாலை சந்திப்பு (1 கி.மீ.)
  • ஹைசன்பெர்க் உணவகம், மனஞ்சிரா அஞ்சல் அலுவலகத்திற்கு அருகில், ☏ +91 4956999933. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை.
  • பிளை டவுன் உணவகம் (Fly Down Restaurant), அரையிடத்து பாலம் (3 கி.மீ.), ☏ +91 81291 11333. வாகன நிறுத்துமிட வசதி இல்லை.
  • கார்லிக் ரூட்ஸ் (Garlic Routes), நாலாம் கேட், ☏ +91 4954023888. தினமும் மதியம் முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். இவ்விடம் கண்ணூர் சாலையில், நான்காவது ரயில்வே கேட் அருகே அமைந்துள்ளது. சிக்கன் மந்தி, வறுத்த கோழி, கீரை மற்றும் செடார் சீஸ் நிரப்பப்பட்ட கிரில் சிக்கன், மசாலா கிரில் இறால் ஆகியவை நீங்கள் கண்டிப்பாகச் சுவைக்க வேண்டிய சில உணவுகளாகும்.
  • இக்காஸ் உணவகம் (Ikkas Restaurant), ரெட் கிராஸ் சாலை, ☏ +91 495 310 6667.
  • ஐவி-நைன் உணவகம் (Ivy-Nine Restaurant), மலபரம்பா சந்திப்பு.
  • பாரகான் உணவகம் (Paragon Restaurant), கே.டி.சி அருகில், கண்ணூர் சாலை, ☏ +91 495 2767020. ஆட்டுக்கறி பிரியாணிக்கு மிகவும் பிரபலமானது. மதிய உணவு நேரங்களில் மிகுந்த கூட்ட நெரிசல் காணப்படும். வாகன நிறுத்துமிட வசதி இல்லை.
  • சாகர் உணவகம், மாவூர் சாலை (2 கி.மீ.). பிரியாணிக்கு பிரபலமானது.
  • சனா உணவகம், தேவகிரி கல்லூரிச் சாலை, மருத்துவக் கல்லூரிக்கு அருகில். அழகான தென்னந்தோப்பின் காட்சியுடன் கூடிய சிறந்த சூழல். வாகன நிறுத்துமிட வசதி உள்ளது.
  • ஸ்பான் உணவகம், ஜெயில் சாலை, ☏ +91 4952700047.
  • தெக்கேப்புரம் ஃபுட் கிங் (தெற்கு கடற்கரை), ☏ +91 9895840757, +91 9897441819. தினமும் மதியம் 3-11 மணி. பழம் நீராசத்து, இரச்சி பத்திரி, மீனுண்டா அல்லது சிக்கன் மம்மோஸ் மற்றும் உன்னக்காயா- இந்த உணவகத்தின் சிறப்பு தயாரிப்புகளில் சில.
  • யாரா உணவகம், கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து நிலையத்திற்கு எதிரே (1 கி.மீ.), ☏ +91 4952727535.
  • ஜைன்ஸ் உணவகம் (Zains Restaurant), கான்வென்ட் சாலை (1 கி.மீ.) — பிரியாணிக்கு
  • ஓம் கார் சைவ உணவகம், சிந்தாவலப்பு. அசைவச் சுவையுடனான சைவ உணவுகள், வெங்காய வளையங்கள், பனீர் ரோல்கள் போன்றவை.
  • நியூ சனா உணவகம், தேவகிரி சாலை (மருத்துவக் கல்லூரி அருகில்). சைவ மதிய உணவு ₹80; மீனுடன் கூடிய மதிய உணவு ₹240; சிக்கன் பிரியாணி ₹180.

உயர் செலவுக்கு

[edit | edit source]
  • கேட்ஸ் உணவகம் (Gates Restaurant), மலபார் கேட் ஹோட்டல் (ராம் மோகன் சாலை), ☏ +91 495-4088999. 07:30 - 22:30. காலை உணவு (பஃபே), மதிய மற்றும் இரவு உணவுகள் வழங்கப்படுகின்றன.
  • மெஸ்பென் உணவகம் (Mezben Restaurant), ஒரு நபருக்கு சராசரியாக ₹800
  • கடவு ரிசார்ட் உணவகம் (Kadavu Resort Restaurant), விமான நிலையச் சாலை.

இனிப்பு

[edit | edit source]

கோழிக்கோடு அல்வா. மைதாவில் செய்யப்படும், மிகுந்த இனிப்பும் வண்ணமயமான தோற்றமும் கொண்ட இந்த இனிப்புப் பலகாரம், பாலயம் சந்திப்புக்கு அருகிலுள்ள சில கடைகளில் கிடைக்கிறது. இது வாழைப்பழம், நெய், தேங்காய், முந்திரி, பேரீச்சம்பழம், இளநீர், அன்னாசி, பலாப்பழம் எனப் பல்வேறு சுவைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் 'கருத்த அல்வா' (கருப்பு அல்வா) வகையே இவற்றில் மிகவும் பிரபலமானதாகும். நீங்கள் உடல்நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டவர் என்றால், அனைத்து வகையான அல்வாக்களையும் தவிர்த்துவிடுவது நல்லது

குடிக்க

[edit | edit source]

மென் பானங்கள்

[edit | edit source]
  • ஆசாத் கூல் பார் (லீக் அலுவலகத்திற்கு எதிரே), ☏ +91 9847823933.
  • பாஸ்கின் ராபின்ஸ் (ஐஸ்கிரீம்களுக்கு), எஸ்.கே. கோயில் சாலை.
  • காபி காபிடே (Cafe Coffee Day), நாலாம் கேட், 2 கி.மீ., ☏ +91 93490 07615. சிற்றுண்டிகள் மற்றும் உயர்தர வசதிகள் கொண்ட குளிரூட்டப்பட்ட காபி நிலையம். குளிரூட்டப்படாத முகப்புப் பகுதி இருக்கைகளும் இங்கு உள்ளன.
  • கோக்கனட் கஃபே, மெட்ரோ டூரிஸ்ட் ஹோம் (கே.எஸ்.ஆர்.டி.சி அருகில், மாவூர் சாலை).
  • டவுன்டவுன் கஃபே, நாலாம் கேட், ☏ +91 4954019037. இளைஞர்களின் கூட தனி இருக்கைகளுடன் கூடிய இடம்.
  • எஸ்கேப் காபி ஷாப், எவிரிதிங்க் பல்பொருள் அங்காடி. (பிஷப் ஹவுஸுக்கு எதிரில், மலப்பரம்பா)
  • சிக்ஸ்த் அவென்யூ கஃபே, தாஜ் ஹோட்டல் எதிரில், ☏ +91 9020902096.
  • சாயெம் கத்தீம், கோழிக்கோடு கடற்கரை (லயன்ஸ் கிளப் அருகில்). பல்வேறு வகையான கருத்தேநீர், மீன் வறுவல்.

குடிப்பகங்கள்

[edit | edit source]
குறைந்த செலவில்
[edit | edit source]
  • அம்ருதா, மாவூர் சாலை, புதிய பேருந்து நிலையம் அருகில். வாகன நிறுத்துமிட வசதி இல்லை.
  • ஓட்டல் மரியா, மாவூர் சாலை (நேஷனல் மருத்துவமனைக்கு எதிரே), ☏ +91 495-2722629, +91 495-4021502.
நடுத்தர செலவில்
[edit | edit source]
  • ஓட்டல் சாஸ்தாபுரி, எம்.எம். அலி சாலை பாளையம் பேருந்து நிலையம் அருகில். சாஸ்தாபுரியில் ஒரு மொட்டைமாடித் தோட்டம் உள்ளது; இது மாலை 5 மணிக்குத் திறக்கும். (சீ குயினைத் தவிர) நீங்கள் அமர்ந்தபடியே புகைபிடிக்க அனுமதிக்கும் ஒரே கண்ணியமான இடம் இது மட்டுமே.
  • சீ குயின் (Sea Queen), கடற்கரைச் சாலை. இங்கு புகைப்பிடிப்பதற்கெனத் தனிப் பகுதி உள்ளது; அமர்ந்தபடியே புகைப்பிடிக்க அனுமதிக்கும், அப்பகுதியிலுள்ள மிகச் சில கண்ணியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
உயர் செலவில்
[edit | edit source]
  • தி கேப்டன்ஸ் கேபின், ஃபார்ச்சூன் ஹோட்டல், கண்ணூர் சாலை, ☏ +91 11-45566666.
  • தி கேட்வே ஓட்டல் (முன்னர் தாஜ் ரெசிடென்சி, கோழிக்கோடு என அறியப்பட்டது), பி.டி. உஷா சாலை, ☏ +91 495 6613000, gateway.calicut@tajhotels.com
  • கடவு ரிசார்ட்ஸ், தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலை.

இரவு வாழ்கை

[edit | edit source]

தொண்டயாட் 9Thondayad) பகுதியிலும் நகரப் பகுதியிலும் தற்போது இரவு நேரப் பொழுதுபோக்குச் சூழல் தென்படுகிறது. வெஸ்ட்வே ஹோட்டல் கேட்வே மற்றும் ரவிஸ் போன்ற ஹோட்டல்களுடன் இணைந்த பப்கள் அங்கு அமைந்துள்ளன. நள்ளிரவு வரையிலும் திறந்திருக்கும் பல வணிக வளாகங்களும், வணிக மையங்களும் அங்கு உள்ளன. மேலும், நள்ளிரவு வரையிலும் சேவைகளை வழங்கும் பல லவுஞ்சுகளும் பார்களும் கூட அங்கு செயல்படுகின்றன.

உறங்க

[edit | edit source]

கோழிக்கோடு நகரின் பெரும்பாலான பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகப் பகல் நேரப் பயணம் மிகவும் கடினமாதகாக உள்ளது. போக்குவரத்துச் சிக்கல்கள் ஏதுமில்லாத, கடற்கரைக்கு அருகிலுள்ள விடுதியில் அறை எடுத்துத் தங்குவது சிறந்தது. பேப்பூர் மற்றும் பாவங்காடு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட 18 கிலோமீட்டர் சாலை முழுவதுமாகவே கடற்கரையோரமாக அமைந்துள்ளதுடன், மிகக் குறைந்த அளவிலான போக்குவரத்து நெரிசலையே கொண்டுள்ளது.