Wy/ta/காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் என்ற நகரமானது, சில சமயம் 'காஞ்சி' அல்லது 'காஞ்சிவரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூர் இந்துக்களின் முக்கியமான புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரம் கண்கவர் கட்டடக்கலை கொண்ட பல இடைக்கால கோயில்களைக் கொண்டுள்ளது. 4-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரை இந்நகரம் பல்லவர்களின் தலைநகரமாக இருந்து வந்தது. மேலும் தென்னிந்தியாவின் அனைத்து முக்கிய சமயங்களுக்கும் கற்றல் மையமாக இருந்தது. இந்து கோயில்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன, மேலும் சமண கோயில்களும் உள்ளன. காஞ்சிபுரம் தென்னிந்தியாவில் பௌத்தத்தின் மையமாகப் புகழ் பெற்றிருந்தாலும், சீன பௌத்த துறவிகள் அங்கு வருகை தந்திருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக, இன்று பௌத்த இருப்புக்கான எச்சங்கள் எதுவும் இல்லை.
நவீன காஞ்சிபுரம் ஒரு முக்கிய பட்டு நெசவு மையமாக உள்ளது. பார்வையாளர்கள் மொத்த விலையில் கைத்தறியால் நெய்த பட்டாடைகளை வாங்க முடியும்.
பார்க்க
[edit | edit source]காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நிறைய மூன்று சக்கர வாகனங்கள் பிரபலமான நான்கு கோயில்களுக்கு அரை நாளுக்கும் அழைத்து காட்டுவார்கள். இதன் மூலம் விரைவாக முக்கிய கோயில்களை குறைந்த செலவில் தரிசனம் செய்யலாம்.
- ஏகாம்பரேஸ்வரர் கோயில்
- காஞ்சி காமாட்சி கோயில்
- வைகுந்த பெருமாள் கோயில்
- வரதராஜ பெருமாள் கோயில்
வாங்க
[edit | edit source]காஞ்சிபுரம் நகரானது, பட்டுப்புடவைகளுக்கு மிகவும் பிரசித்திப் பெற்றது. இங்கு பல கூட்டுறவு பட்டுப்புடவை கடைகள் உள்ளன.
அடுத்து செல்ல
[edit | edit source]