Wy/ta/கண்டி
Appearance
கண்டி என்பது இலங்கையில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகளை கவரும் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும். நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது. இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.