Wy/ta/கக்கலை தாவரவியற் பூங்கா
Appearance
கக்கலை தாவரவியற் பூங்கா என்பது இலங்கையிலுள்ள மூன்று தாவரவியற் பூங்காக்களில் ஒன்றாகும். பேரதேனிய தாவரவியற் பூங்கா மற்றும் கெனரத்கொடை தாவரவியல் பூங்கா என்பன மற்றைய இரு தாவரவியற் பூங்காக்கள் ஆகும். கக்கலை தாவரவியற் பூங்கா இலங்கையிலுள்ள இரண்டாவது பெரிய பூங்காவாகும். இப்பூங்கா கக்கலை வரையறுக்கப்பட்ட இயற்கை ஒதுக்கி வைக்கப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவரும் இயற்கை எழில்களில் ஒன்றாகும்.