Wy/ta/ஓட்டன் சமவெளி தேசிய வனம்
ஓட்டன் சமவெளி (Horton Plains, ஹோட்டன் சமவெளி) இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது. 1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக (புகலிடம்) காணப்பட்ட ஹட்டன் சமவெளி, 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான (பசுமை மாறா) மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும்.
முக்கிய இடங்கள்
[edit | edit source]பேர்கஸ் நீர்வீழ்ச்சி
[edit | edit source]ஹோட்டன் சமவெளிக்கு வரும் பெரும்பாலான பயணிகள் பார்வையிடும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது வளவை ஆற்றின் தலையாறான பெலிவுல் ஆற்றில் அமைந்துள்ளது. பிரித்தானியர் ஆட்சியின் போது இப்பகுதியில் யானைகளை வேட்டையாடிய பிரித்தானியரான சர். சமுயெல் பேர்கஸ் என்பரின் நினவாக பெயரிடப்பட்டுள்ளது. இங்கு மக்கள் நீராடுதல் பொதுவான காட்சியாகும், இருப்பினும் இங்குள்ள நீர் வெப்பநிலை குறைவானதால் அவதானத்துடன் இருப்பது முக்கியமாகும்.
கிரிகல் பொத்தை மலை
[edit | edit source]ஹோட்டன் சமவெளியின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 2,313 மீட்டர் உயரமானதாக இருந்தாலும் ஹோட்டன் சமவெளிக்கு மேலாக இதன் உயரம் சிறியதே. எனினும் இதன அடிவாரத்தை அடைவதற்கு சதுப்பநிலங்களுக்கூடாக செல்ல வேண்டும். மழை நாட்களில் ஏறுவதைத் தவிர்த்தல் நன்று.
தொடுபலை மலை
[edit | edit source]ஹோட்டன் சமவெளியின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 2,360 மீட்டர் உயரமானது. ஹோட்டன் சமவெளிக்கு மேலாக இதன் உயரம் சிறியதாகும். எனவே இதனை ஹோட்டன் சமவெளியில் இருந்து ஏறுவது இலகுவானதாகும். மலையடிவாரமும் இலகுவாக அடையலாம்.
உலக முடிவு
[edit | edit source]இது ஹோட்டன் சமவெளியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள 700-1000 மீட்டர் உயரமான செங்குத்து உயரத்தைக் குறிக்கும். ஹோட்டன் சமவெளியின் முக்கிய கவர்ச்சிகளில் ஒன்றாகும். .
பார் இன்
[edit | edit source]இது முக்கிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. ஹோட்டன் சமவெளியின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள நோர்த்-கோவ் தேயிலைப் பெருந்தோட்டத்தின் முன்னாள் அதிகாரி தோமஸ் பார் என்பவரால் 1901ஆம் ஆண்டு வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்குமான தனிப்பட்ட விடுதியாக அமைக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு பார் இங்கிலாந்தில் மரணமான போது இவரது சாம்பல் ஹோட்டன் சமவெளிக்கு கொண்டுவரப்பட்டு தூவப்பட்டது. இவரது மரணத்துக்குப் பிறகு விடுதி உல்லாசப்பிரய்யாணிகளுக்கான தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது. 1980 ஆம் ஆண்டு இது அரசவசப்படுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் இது ஒரு நூதனசாலையாக மாற்றப்பட்டுள்ளது.
சுற்றுலா
[edit | edit source]ஹோட்டன் சமவெளி பாதுகாக்கப்பட்ட வனமாக இருந்தாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் மத்திய மலைநாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. தேசிய வனத்துக்குள் தனியான சுற்றுலா விடுதிகள் சிலவும், கூட்டுச் சுற்றுலா விடுதிகள் சிலவும் காணப்படுகின்றன. நீங்களும் சென்று பார்க்கலாம்.