Wy/ta/ஏலகிரி

From Wikimedia Incubator
< Wy‎ | ta
Wy > ta > ஏலகிரி

ஏலகிரி என்னும் சுற்றுலாத்தலம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள மலைவாசத் தலமாகும். இது ஏலமலை என்றும் அழைக்கப்படும்.

ஏலகிரி மலை
ஏலகிரி ஏரி
ஏலகிரியிலுள்ள நெல் வயல்கள்
மலைப் பூக்கள்
ஏலகிரியிலுள்ள கொண்டை ஊசி வளைவில் செல்லும் வாகனம்

ஆண்டு முழுவதும் இங்கு குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவும். இங்குள்ள 14 ஊர்களில் பழங்குடியினர் வாழ்கின்றனர். இவர்கள் காட்டுப்பயிர்களை நம்பியும் உழவுத் தொழிலை நம்பியும் வேலை செய்கின்றனர்.

சென்றடைவது[edit | edit source]

சொந்த வாகனம்[edit | edit source]

பெங்களூரில் இருந்து கிளம்புவோருக்கு[edit | edit source]

ஏலகிரி, பெங்களூரில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது. ஏழாம் தேசிய நெடுஞ்சாலையில், ஓசூர் வரை வந்து, சென்னையை நோக்கிய பாதையில், 46ஆம் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி, கிருஷ்ணகிரியை அடையவும். அங்கிருந்து வாணியம்பாடியை நெருங்கும்போது, அருகிலிருந்தே மலையை காண முடியும். சுங்கச்சாவடியை அடுத்து 2 கி.மீ தொலைவில் சென்று, வலதுபுறச் சாலையில் சென்றால் திருப்பத்தூர் வரும். அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் பொன்னேரி சந்திப்பு உள்ளது. பொன்னேரிக்கு இடதுபுறத்திலுள்ள சாலையில் சென்றால் ஏலகிரியை அடையலாம். பெரும்பாலான பெயர்ப்பலகைகள் தமிழிலும், ஆங்காங்கே ஆங்கிலத்திலும் இருக்கின்றன.

சென்னையில் இருந்து கிளம்புவோருக்கு[edit | edit source]

சென்னையில் இருந்து 258 கி.மீ தொலைவில் ஏலகிரி மலை அமைந்துள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லியை அடையவும். அங்கிருந்து பெங்களூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபேட்டை வழியாக 140 கி.மீ தொலைவில் வேலூரை வந்தடையவும். அங்கிருந்து ஆம்பூர் வழியாக வாணியம்பாடியை நோக்கிச் செல்லவும். வழியில், ஏலகிரிக்கான வழிகாட்டிப் பலகை காணப்படும். அங்கிருந்து இடதுபுறம் சென்று, பொன்னேரியை அடையவும்.

ஏலகிரி மலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. மலையிலுள்ள சாலையில் வண்டிகளை நிறுத்துமளவுக்கு இடம் இருக்காது என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

தொடர்வண்டியில்[edit | edit source]

தொடர்வண்டியில் வருவோர் ஜோலார்பேட்டையில் இறங்கிக் கொள்ளவும்.

பொதுப் போக்குவரத்து[edit | edit source]

திருப்பத்தூரில் இருந்தும், ஜோலார்பேட்டையில் இருந்தும் ஏலகிரிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கவனத்தில் கொள்ள வேண்டியவை[edit | edit source]

  • எரிபொருள்: மலையில் பெட்ரோல் பங்குகள் இல்லை. எனசே, பொன்னேரிக்கு அருகிலுள்ள பெட்ரோல் பங்குகளை பயன்படுத்திக்கொள்ளவும்.
  • மருந்துகள் : மலையில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தேவைப்படின், முதலுதவிப் பெட்டியை உடன் வைத்துக் கொள்ளவும். திருப்பத்தூரில் அதிக மருத்துவ வசதிகள் கிடைக்கின்றன.