Wy/ta/உடவளவை தேசியப் பூங்கா
Appearance
உடவளவை தேசியப் பூங்கா இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள தேசிய வனமாகும். 1972 ஆம் ஆண்டு வளவை ஆற்றின் நீரேந்துப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது. பூங்கா மொத்தம் 306 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. பூங்கா புல் நிலங்களாலும் சிறிய தேக்குக் காடுகளாலும் ஆனது.பூங்காவில் 400க்கும் மேற்பட்ட ஆசிய யானைகள் இருக்கின்றன. காட்டு யானைகளை இலகுவாக பார்வையிட முடியும். மேலும் இங்கு சிறுத்தைகளும் காணப்படுகின்றன. முதலை, பொன்நிற நரி, நீர் எருமை போன்றவை இங்கு காணப்படும் முக்கிய விலங்குகளாகும்.