Jump to content

Wy/ta/அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம்

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம்

அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம் (Achanakmar Wildlife Sanctuary) என்பது இந்தியாவில் உள்ள சத்தீசுகர் மாநிலத்தில் இருக்கும் ஒரு வனவிலங்கு பூங்காவாகும். சிறுத்தைப்புலிகள், வங்கப்புலிகள், மற்றும் காட்டு எருமை உட்பட அருகிய ஆபத்தான விலங்கினங்கள் பல இப்பூங்காவில் காணப்படுகின்றன.

1972 ஆம் ஆண்டு உருவான வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம் 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இச்சரணலாயம் ஒரு புலிகள் காப்பகம் என அறிவிக்கப்பட்டது. 557.55 கி.மீ2 பரப்பளவை வனப்பகுதியாகப் பெற்றுள்ள இப்பூங்கா மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் கன்கா புலிகள் காப்பகத்துடன் கன்கா-அச்சனக்மர் மலைப்பாங்கான பாதையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது[1]. மேலும், பிலாசுப்பூர் வனப்பகுதிப் பிரிவின் ஒரு பகுதியாகவும், பிலாசுப்பூருக்கு வடமேற்கில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவிலும் இப்பூங்கா அமைந்துள்ளது. இச்சரணாலயத்திற்கு அருகில் பெல்காகனா தொடருந்து நிலையம் இருக்கிறது. பிலாசுப்பூர் தொடருந்து நிலையம் மற்றும் பெந்தரா சாலை நிலையங்களில் இருந்து அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயத்திற்கு எளிதாகச் செல்ல முடியும். பேருந்து வசதி, வாடகைக் கார் வசதி மற்றும் பிற வாகன வசதிகள் தாரளமாக இருப்பதால் இப்பூங்காவை அடைவதும் இரசிப்பதும் எளிமையாகும். அச்சனக்மர் உணவு விடுதி, காப்பி இல்லம் மற்றும் பிற வசதிகளும் இங்குண்டு. இச்சரணலாயத்திற்கு அருகில் அமர்கண்டாக் புனித நகரமும் நர்மதா ஆறு தோன்றுமிடமும் இருக்கின்றன[2]

தாவரங்கள்

[edit | edit source]

இங்குள்ள வனப்பகுதியில் முக்கியமாக சால், சயா, பியா, மற்றும் மூங்கில் போன்ற காட்டுத்தாவரங்கள் காணப்படுகின்றன.

விலங்குகள்

[edit | edit source]

சிறுத்தைப்புலிகள் இந்தியக் காட்டெருமை, புள்ளி மான், வங்கப்புலிகள், கோடிட்ட கழுதை புலி, குள்ள நரி, கரடி, செந்நாய், கடமான், காட்டுப்பன்றி, குரைக்கும் மான், புல்வாய், இந்தியச் சிறுமான், நாற்கொம்பு மான் போன்ற விலங்குகளுடன் மற்ற இயல்பான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[edit | edit source]
  1. Kanha-Achanakmar, WWF India
  2. Kanchi Kohli,Achanakmar village lies within the sanctuary, providing accommodation and food to tourists. Another settlement with a tourist rest house stands at the Kota Kargi road dam, on the road to Kargi, around 5 km from Kota. At Shiv Tarai and Bari Ghat there are road crossings where bison can often be seen, and when we cross village achanak mar we enter in very beauty natural sal(sarai) vally. Achanakmar hase been declare Project tiger in 2009 and development of this century is ongoing."Forest Interlude: Eco-Tourism". In The Hindu, July 30, 2006

புற இணைப்புகள்

[edit | edit source]

Template:Commons category