Wy/ta/சிகிரியா

From Wikimedia Incubator
< Wy‎ | ta
Wy > ta > சிகிரியா

சிகிரியா என்பது இலங்கையில் அமைந்துள்ள சுற்றுலா பயணிகளை கவரும் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும். இது இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்பன் கட்டினான் எனக் கூறப்படுகிறது.