Wy/ta/வால்பாறை
வால்பாறை என்னும் மலைவாசஸ்தலம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இந்த மலைவாசஸ்தலம், கோயம்புத்தூரில் இருந்து 104 கி.மீ. தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 64 கி.மீ. தூரத்திலும், எர்ணாகுளத்தில் இருந்து 110 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது
வர
[edit | edit source]வான்வழி
[edit | edit source]கொச்சி விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து சாலை வழியாக 117 கி.மீ. பயணித்தால் வால்பாறையை வந்தடையலாம். வரும் வழியில் வாழச்சால், அதிரப்பள்ளி ஆகிய சுற்றுலாத்தலங்களுக்கும் சென்று வரலாம்.
கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து 124 கி.மீ. பயணித்தால் வால்பாறையை வந்தடையலாம்.
சாலை வழி
[edit | edit source]பொள்ளாச்சி, கோயம்புத்தூர், சாலக்குடி, பழநி ஆகிய ஊர்களில் வால்பாறைக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ரயில் வழி
[edit | edit source]பொள்ளாச்சி சந்திப்பை வந்தடைந்து, அங்கிருந்து பேருந்தில் பயணித்து வந்து சேரலாம். கேரளத்தில் இருந்து வரும் பயணிகள் சாலக்குடியில் இறங்கி, அங்கிருந்து பேருந்தில் பயணித்து வந்து சேரலாம்.
சுற்றிப் பார்க்க
[edit | edit source]வாடகைக் காரிலும், பைக்கிலும் வால்பாறையைச் சுற்றிப் பார்க்கலாம்.

செய்யத்தக்கவை
[edit | edit source]- மலையேற்றம்
- தேயிலைத் தோட்டப் பார்வை
- மலை/காட்டு உயிரிகளை படமெடுத்தல்
உதவிக்கு
[edit | edit source]- காவல்: 100
- தீயணைப்பு/அவசர மருத்துவம்: 108
மற்ற இடங்கள்
[edit | edit source]- வாழச்சால்
- அதிரப்பள்ளி
- கோயம்புத்தூர்
- கொடைக்கானல்
- மூணாறு
- பழநி
- பொள்ளாச்சி
- உடுமலைப்பேட்டை