Jump to content

Wy/ta/திருச்சிராப்பள்ளி

From Wikimedia Incubator
< Wy | ta
Wy > ta > திருச்சிராப்பள்ளி

திருச்சிராப்பள்ளி (திருச்சி) என்பது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது காவிரிக்கரையில் அமைந்த நகரமாகும். சோழ மன்னனின் காலத்திலிருந்தே இது தலைநகராக விளங்குகிறது.இந்நகரம் தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். கரிகாலச் சோழன் கட்டிய உலகின் மிகவும் பெருமை வாய்ந்த பழைய அணையான கல்லணை திருச்சியில் உள்ள உறையூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.

மொழி

[edit | edit source]

இந்நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் தாய்மொழி தமிழ் ஆகும். மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம்,சௌராஷ்டிரம்,இந்தி போன்ற மொழிகளைப் பேசுபவர்களும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள்.

பார்க்க

[edit | edit source]

கோவில்கள்

[edit | edit source]
  • அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி
  • அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி
  • அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்
  • அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்
  • அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர்
  • அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்காவல்
  • அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், வயலூர்
  • அருள்மிகு நாச்சியார் கோயில், உறையூர்
  • அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர்
  • அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில், மாந்துறை
  • அருள்மிகு உத்தமர் கோயில்
  • அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில், குணசீலம்
  • அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி
  • அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில், பொன்மலை
  • அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பொன்மலை
  • அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பொன்மலை
  • அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பட்டூர்

சுற்றுலாத் தலங்கள்

[edit | edit source]
  • மலைக்கோட்டை - தாயுமானவர் கோவிலும், உச்சிப்பிள்ளையார் கோவிலும் இதில் உள்ளது. இம்மலைக்கோட்டையில் இரண்டு இடங்களில் குடைவரைக் கோவில்கள் உள்ளன. ஒன்று திருத்தலத்திலும், மற்றொன்று கோவிலின் கீழ்ப்பகுதியில் (மலையின் அடிவாரத்தில்) சிறிது தொலைவில் அமைந்துள்ளது.
  • ஸ்ரீரங்கம் - காவிரி நதியினால் தீவாக்கப்பட்ட இடமாகும். இங்கு அரங்கநாத சுவாமி கோவில், அம்மா மண்டபமும் உள்ளது.
  • திருவானைக்கோவில் - மிகவும் பழமையான சிவ தலம் இங்கு அமைந்துள்ளது.
  • முக்கொம்பு - காவிரி நதியினை கல்லணையின் பக்கம் திருப்பிவிடப் பயன்படும் அணை இங்கு உள்ளது. இங்கு அழகிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
  • கல்லணை - கரிகாலன் கட்டிய மிகவும் பழமையான, உறுதியான அணையாகும்.
  • வயலூர் முருகன் கோயில்
  • கங்கை கொண்ட சோழபுரம்
  • சமயபுரம் - மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் இங்கு அமைந்துள்ளது.

உண்ண

[edit | edit source]

சைவ உணவகங்கள்

[edit | edit source]
  • ஸ்ரீ சங்கீதாஸ் பல கிளைகள்
  • வசந்த பவன்
  • ஸ்ரீ சரஸ்வதி கஃபே
  • ஆப்பிள் மில்லட் (சிறுதானிய உணவுகள்)
  • மணிஸ் கஃபே
  • பார்த்தசாரதி விசாஸ்

அசைவ உணவகங்கள்

[edit | edit source]
  • ஜெய்லானி உணவகம் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி
  • KMS ஹக்கீம் கல்யாண பிரியாணி
  • கண்ணப்பா உணவகம்
  • செவத்தகனி பிரியாணி
  • ராஜா கார்டன்
  • அரேபியன் ஸ்பைஸ்