Wy/ta/கன்னியாகுமரி
கன்னியாகுமரி (Kanyakumari) என்பது இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் ஆகியன சங்கமிக்கும் இடமாக இது திகழ்கிறது. இதுவே இந்தியாவின் தென்முனையாகும்.
புரிதல்
[edit | edit source]இந்தியா, உயர்ந்த மலைகளையும் அதே வேளையில் கடல்களையும் கடற்கரைகளையும் ஒருங்கே கொண்ட ஒரு சிறப்புமிக்க நிலப்பகுதியாகும். மேலும், வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று பெரும் கடல்களுடனும் இது தனது கடற்கரைகளைப் பகிர்ந்துகொள்கிறது. இம்மூன்று கடல்களும் சங்கமிக்கும் இடத்தைக் கன்னியாகுமரியில் நாம் கண்டு ரசிக்கலாம். இந்தத் தனித்துவமான இயற்கை நிகழ்வு, இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ள இந்தச் சிறிய நகரத்தை, ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்கு ஏற்ற ஒரு முக்கியத் தலமாக மாற்றியுள்ளது.
கன்னியாகுமரியின் புகழ், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகாத்மா காந்தி போன்ற முக்கியப் பிரமுகர்களை ஈர்த்துள்ளது. இவ்விருவரின் பெயரிலும் இங்கு நினைவிடங்கள் அமைந்திருப்பது தற்செயலான ஒன்றல்ல. மேலும், அதன் புவியியல் அமைப்பின் காரணமாக, ஒரே கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தையும் சூரிய உதயத்தையும் ஒருங்கே காணக்கூடிய உலகின் சில இடங்களில் கன்னியாகுமரியும் ஒன்றாகும்.
போக்குவரத்து
[edit | edit source]- கன்னியாகுமரி ரயில் நிலையம்
- கன்னியாகுமரி பேருந்து நிலையம்
பார்க்க
[edit | edit source]- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்.
- விவேகானந்தர் பாறை.
- திருவள்ளுவர் சிலை - இது 133 அடி உயரம் கொண்டது. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களைக் குறிக்கும் விதமாக 133 அடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- காந்தி மண்டபம்.
- காமராஜர் மணிமண்டபம்.
- சூரிய உதயம், சூரிய அஸ்தமனக் காட்சி.
அருகில் இருப்பவை
[edit | edit source]- சுவாமிதோப்பு.
- சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்.
- வட்டக்கோட்டை (திருவனந்தபுர அரசரால் கட்டப்பட்டது. கன்னியாகுமரியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் உள்ளது).
- பத்மனாபபுரம் அரண்மனை.
- உதயகிரிக் கோட்டை.
- சொத்தவிளை கடற்கரை.
- நாகராஜா கோவில்.
- முட்டம் கடற்கரை.
- மாத்தூர் தொட்டிப் பாலம்.
- திற்பரப்பு அருவி.
- திருவனந்தபுரம் - கேரளாவின் தலைநகரம். இது கன்னியாகுமரியிலிருந்து 85 கி.மீ. தொலைவில் உள்ளது.
புவியியல் ஆள்கூறுகள்
[edit | edit source](8.0833°N, 77.5500°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கன்னியாகுமரி அமையப் பெற்றுள்ளது.